Header Ads



குற்றம் புரிந்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களை பிடிக்க நடவடிக்கை

நிதி மோசடி உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­செயல் செய்து தப்­பித்து வெளி­நா­டு­களில் தஞ்­சம்­பு­குந்­த­வர்­களை கைது செய்­வ­தற்கு சீனா, உக்ரேன்,ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடு­க­ளுடன் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளோம் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மீள­ஒப்­ப­டைத்தல் சட்­டத்தின் கட்­ட­ளைகள் சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நிதி மோசடி உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­செயல்கள் செய்து தப்­பித்து வெளி­நா­டு­களில் தஞ்­சம்­பு­குந்­த­வர்­களை கைது செய்­வ­தற்கு சீனா, உக்ரேன்,ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடு­க­ளுடன் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளோம். 

இதன்­ப­டியே இந்த சட்­டத்தை சபையில் நிறை­வேற்ற திட்­ட­மிட்­டுள்ளோம். சர்­வ­தேச அளவில் பாரிய மோச­டி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் குறித்து நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இதன்­படி நிதி மோசடி, போதை பொருள் கடத்தல் உள்­ளிட்ட பல குற்­றங்­களில் ஈடு­பட்டு வெளி­நா­டு­களில் தலை­ம­றை­வா­கி­யுள்­ளனர். 

இதன்­படி சீனா, உக்ரேன்,ரஷ்யா ஆகிய நாடு­க­ளுடன் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளோம். அதே­போன்று ஏனைய நாடு­க­ளு­டனும் இணக்­கத்­திற்கு வரு­வ­தற்கு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன்மூலம் இலங்கையில் குற்றம் இழைத்த வெளிநாட்டவர்கள் குறித்து அவதானம் செலுத்துவோம் என்றார்.

1 comment:

  1. ஐயா ஓர் அன்பான வேண்டுகோள் முதலில் இங்குள்ளவர்களை கைது செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.