Header Ads



வீதிவீதியாக நிதி சேகரிப்பவர்கள், பிச்சைக்காரர்களே தவிர பிக்குமார் அல்ல - பொன்சேகா

வீதி வீதியாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் பிச்சைக்காரர்கள் மாத்திரமே ஈடுபடுவார்கள் என்று அமைச்சர் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனமொன்றை முன்வைத்துள்ளாா்.

சில் அனுட்டானத் துணி விநியோக மோசடி வழக்கில் லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்காக பௌத்த பிக்குமார் பிச்சைப் பாத்திரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட சரத் பொன்சேகா, பௌத்த பிக்குமார் உணவுக்காக மாத்திரமே பிச்சைப் பாத்திரம் ஏந்த பௌத்த தர்மம் இடமளிக்கின்றது.

பிக்குமார் நிதி விடயங்களில் ஈடுபடுவதையும் தடை செய்துள்ளது.வீதி வீதியாக நிதி சேகரிப்பவர்கள் பிச்சைக்காரர்களே தவிர பிக்குமார் அவ்வாறு செய்ய முடியாது.

எல்லே குணவங்ச தேரர் பௌத்த தேரருக்கு பொருந்தாத தரங்கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் அதே வார்த்தைகளில் நானும் பதிலடி கொடுத்துள்ளேன்.

மற்றபடி பௌத்த பிக்குமாரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.கடந்த ஆட்சியில் தான் அவ்வாறு பிக்குமார் அவமானப்படுத்தப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள். அவ்வாறான வியாதி எங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.