Header Ads



ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல், நல்லிணக்கத்தை குழப்பும் சிலரின் முயற்சி

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பான பிரச்சினையை பயன்படுத்தி எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை குழப்ப சில நபர்களும் குழுக்களும் முயற்சி செய்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. குழப்பம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவரையறைகளுக்கு அமையவே அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக கல்கிஸ்சையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சு இந்த தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்ட அகதிகள் இரத்மலானையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு சட்டவிரோதமாக சிலர் நடந்து கொண்ட விதம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவத்தில் 3 பொலிஸார் காயமடைந்தார்கள். இதனையடுத்து அகதிகள், ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் கோரிக்கைக்கமைய பூஸ்ஸ தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்கு சட்டவிரோதமாக நுழைந்த நிலையில் கைதான ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட வரையறைகள் மற்றும் முறைமைகளுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 ரோஹிங்கிய அகதிகளும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமையவே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

4 வருடங்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்த பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்திருந்தார்கள். இவர்கள் கடற்படையினரால் கைதாகி யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். சிறைச்சாலை திணைக்களம் இவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக மிரிஹான முகாமில் தடுத்து வைத்திருந்தது.

மல்லாகம் நீதிமன்றம் இவர்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்கள் விரைவில் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினூடாக வேறு நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இதற்கு முன்னரும் ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாறு 2008 இல் வந்தவர்கள் 2012 இலும் 2013 இல் வந்தவர்கள் 2015 இல் வேறு நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் இடம் பெற்ற குழப்ப நிலை தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸார் கல்கிஸ்சை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்த போது எந்த அமைப்பும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவில்லை. ஆனால் சில அரசியியல் ரீதியான அமைப்புகள் அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு நடந்துள்ளன.

அகதிகள் தொடர்பான அரசாங்கத்தில் கொள்கையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. எந்த அகதிக்கும் இங்கு பிரஜாஉரிமை வழங்கவோ தொடர்ந்து தங்க வைக்கவோ வீஸா வழங்க முடிவு செய்யப்படவில்லை.

சில நபர்களும் அமைப்புகளும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்புவதற்கு மேற்கொள்ளும் இவ்வாறான பொய் செயற்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கோருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்  

7 comments:

  1. Complete Failure of Law & Order - You are still not ashamed to resign?????????

    ReplyDelete
  2. He is just walkeup from sleeping. He failed to do what should have been done to the law braking people.
    When will Sri Lanka establish thlaw and order in the country????????????

    ReplyDelete
  3. Please resign minister

    ReplyDelete
  4. Hi Dog! if you don´t do propely your duty resign and go home.

    ReplyDelete
  5. சிலர் என்று சொல்லாதே பௌத்த தீவிர வாதிகள் என்று சொல்

    ReplyDelete
  6. control your word's. the "Islam word" it self have the answer for you ¡¡¡¡

    ReplyDelete
  7. it's a total failure in the law and order in the country. without taking the proper action at the spot, talking story's. these monks and thugs very very well knows that, police will just watch what ever they do when it comes to Muslims.there dont care which grade police office is present at the spot. they can do whatever possible. President, prime minister, minister all are acting like nothing happening. if its Muslim don a small mistakes law will very powerful. but Buddhist there's no law. good country but kele neethiya.

    ReplyDelete

Powered by Blogger.