Header Ads



இலங்கையிலுள்ள ரோஹின்யர்களை வெளியேற்ற ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம், ரஷ்ய தூதரகத்தில் மகஜர் கையளிப்பு

ரோஹிங்யா அகதிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு கோரி சில சிங்கள அமைப்புகள் இணைந்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் எதிரில் இன்று -27-ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

முன்னதாக ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற உதவுமாறு கோரி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மகஜர் ஒன்றை கையளித்து இந்த அமைப்புகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.

இதனையடுத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை அலுவலகத்தில் மகஜரை கையளிக்க சிங்கள அமைப்புகள் பேரணியாக சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களை நாட்டில் தங்கவைத்திருப்பது சட்டவிரோதமானது என சிங்கள அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த மக்களை பாதுகாக்க அமைச்சர்கள் உட்பட முன்னணி அரசியலவாதிகள் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

கல்கிஸ்சை பிரதேசத்தில் சில மாடி வீடுகளில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களை தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்க அமைச்சர்கள் சில தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக சிங்களே அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.