Header Ads



மியான்மாரில் இருந்து வந்த 7 பிக்குகள், திருப்பி அனுப்பப்பட்டனர்


மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.

மியான்மாரின் ஏழு பௌத்த பிக்குகளைக் கொண்ட குழுவே, சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ரொஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக சிறிலங்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், மியான்மாரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவிசைவு வழங்குவதை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்னதாக முடிவு எடுத்திருந்தது.

எனினும், அவ்வாறு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

அதேவேளை, கடுமையான கண்காணிப்பு நடைமுறையின் பின்னரே, மியான்மாரில் இருந்து வருவோருக்கு நுழைவிசைவு விழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, இன்று -18- கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த மியான்மார் பௌத்த பிக்குகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. This is not true maybe and they are creating a frame and example for deportation of Muslims from Myanmar if they arrive in Sri Lanka.

    Old technique but still can be implemented.

    ReplyDelete

Powered by Blogger.