Header Ads



25 இலட்சம் பேர் பங்கேற்ற ஜனாஸா நல்லடக்கம் - 20.000 யூத, நஸாராக்களுக்கு ஹிதாயத்தும் கிடைத்தது


-Mufaris Rashadi-

வரலாற்றில் இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அந்த ஜனாஸா நல்லடக்கம்.

தொலைத் தொடர்பு சாதனங்களின் துரித வளர்ச்சியினாலும் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கினாலும் பலரின் மரண செய்திகள் உலகின் மூலை முடுக்கெங்கும் நொடிப் பொழுதினில் சென்றடைகிறது. இதனால் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவரின் ஜனாஸாவிற்கு பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.. இதுவும் போற்றத்தக்க சிறந்த அம்சமே.

இவை எந்த ஒன்றுமே இல்லாத அந்தக் காலத்தில் இமாம் இப்னுல் ஜௌஸி, இப்னுல் அதீர், இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹிம் (அல்பிதாயா வந்நிஹாயா, மனாகிபுல் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்) போன்ற நூற்களில் கூறுவது போல இரண்டரை (25 இலட்சங்கள்) மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இமாமுஸ் ஸுன்னா அஹ்மத் இப்னு ஹம்பலின் ஜனாஸா நல்லடக்கம் இருபதாயிரம் யூத, நஸாராக்களின் ஹிதாயத்துக்கும் காரணமாக அமைந்தது.. என்றால் இதுவே உண்மையான ஏகத்துவ வாதிகளின் மரணம் முற்றுப் புள்ளியல்ல என்பதற்கும், அவர்கள் மறைந்தாலும் கூட அவர்கள் சுமந்த கொள்கை மனித மனங்களில் மறுமை வரை அவர்களை வாழவைக்கும் என்பதற்கும் சிறந்த சான்றாகும்.

உலக வரலாற்றிலே இந்த மனிதரின் ஜனாஸாவில் மக்கள் கலந்து கொண்டது போன்று வேறு எந்த ஜனாஸாவிலும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்ள வில்லை...என்பதே இமாம் பைஹகி போன்றோரின் அறிவிப்பாகும்.
இமாமுஸ் ஸுன்னா அஹ்மத் இப்னு ஹன்பல் ரழியல்லாஹு அன்ஹு ❤️

No comments

Powered by Blogger.