Header Ads



ஹிஸ்புல்லா ஒதுக்கிய நிதியில், ஹிஸ்புல்லா இல்லாமல் ரணில் திறந்துவைத்த கட்டிடம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைக்கான புதிய கட்டடம் இன்று -20- பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நகரசபைக்கான கட்டட திறப்பு விழா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த திறப்பு விழாவில் பிரதர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட நான்கரை கோடி ரூபா செலவில் இந்த நகரசபைக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. வெக்கம் கெட்ட முஸ்லிம் கட்சி. இது எதைபோலென்றால் யாரோ பெற்ற பிள்ளைக்கு வேறு யாரோ பெயர் வைப்பதை போன்றுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. They are not political leaders. They are hypocrites. By knowing all these still the people are rallying with them for reasons not known.

      Delete
  2. Government ministers are temporary custodians of public property, Once their term is over, they have to leave

    ReplyDelete

Powered by Blogger.