Header Ads



ஆப்கானிஸ்தானில் கடைசி அமெரிக்கர் இருக்கும்வரை, யுத்தத்தை தொடருவோம் - தலிபான்


ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தானுக்கு ஆதாரவாக அமெரிக்கா உதவி வருகிறது. 

இந்நிலையில், இன்று 4 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும், அவர்கள் காலவரையின்றி போர் முடிவடையும் வரை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு ஆப்கான் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் இந்த உத்தரவிற்கு தலிபான் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜகிபுல்லா முஜாகித் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் போரை தொடர்வதற்கு பதிலாக, அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற யோசிக்க வேண்டும். 

எங்கள் நாட்டில் கடைசி ஒரு அமெரிக்க ராணுவவீரர் இருக்கும்வரை, நாங்கள் எங்கள் யுத்தத்தை தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

9 comments:

  1. தலிபான் தீவிரவாதிகள் இன்னும் இருக்கிறார்களா?

    ஆப்கானித்தான் ராணுவத்தினரோடு தானே யுத்தம் செய்ய போகிறார்களாம்.
    அதுக்கென்ன, அவர்களுக்கும் பொழுது போகத்தானே வேணும்.

    ReplyDelete
    Replies
    1. புலிக்கொள்ளைக்கூட்டம்தான் பூண்டோடு அழிக்கப்பட்டது...

      தலிபான் வீரர்கள் எப்போதும் போராடுவோம் என்பர்.

      புலி்த்தீவிரவாதிகள் தங்களுக்குள்ளே பங்கு போடும் சண்டையில் மாண்டுபோனர்.

      Delete
  2. சரியான அறிவிப்பு...

    ReplyDelete
  3. சகோ அஜான், உன் வீட்டுக்கு வந்து யாரவது வந்து திருடினால் அவன் திருடனா இல்லை உன் வீட்டில் உள்ளவர்கள் திருடர்களா, so நீயே முடிவு செய் யார் தீவிர வாதி என்று, உனக்கு ஏர்க்கனவே இப்படி ஒரு உதாரணம் தந்துள்ளேன் வேண்டுமென்றால் மீண்டும் தருவேன்

    ReplyDelete
  4. உன்னுடைய நாட்டில் அமெரிக்கன் வந்து இருந்து கொண்டு உன்னை ஆட்சி செய்தால் அவனை எதிர்த்து நீ யுத்தம் செய்தால் நீ பயங்கரவாதியா?

    ReplyDelete
  5. சுடுகாடாக இருந்த ஆப்கானித்தானை, தலிபான், அல்கொய்தா ஆகிய பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டு எடுத்து, அதனை ஒரு ஒழுங்கான நாடாக மாற்றியது அமேரிக்கா தான்.

    முன்னர் முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கு போனாலும் குற்றம், தலிபான்கள் கற்பலித்து கொன்றுவிடுவார்களாம்.

    அமேரிக்கா போனால் இது திரும்பவும் சுடுகாடாக மாறிவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Who is manufacturing & providing weapons to Taliban & al-Qaeda?

      Delete
    2. countries like Pakistan sells weapons to these terrorists

      Delete
  6. மற்றவர்களது விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அந்தோனி பிறப்பால் நெறிபிறழ்ந்தவனாக இருக்கமுடியாது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.