Header Ads



ஹஜ் செல்லும் போது சவூதி + கட்டார் குறித்து விமர்சிக்காதீர்கள் - அமைச்சர் ஹலீம் அறிவுரை

-ARA.Fareel-

இலங்கை ஹஜ்­யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவில்  தங்­கி­யி­ருக்கும் காலத்தில் சவூதி அரே­பியா மற்றும்  கட்டார் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் நில­வி­வரும்  முரண்­பா­டு­களை தங்­க­ளுக்குள் விமர்­சிக்­கவோ, சவூதி  அரே­பியா உட்­பட ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டவோ கூடாது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கி­யுள்ளார். 

அமைச்சர் ஹலீம் ஹஜ் ­யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள  அறி­வு­ரையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;  

‘கட்டார் நாட்­டுக்கும் சவூதி அரே­பி­யா­வுக்கும் இடையில்  நிலவும் முரண்­பா­டுகள் கார­ண­மாக இரு­நாட்டு உற­வு­களும் பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. இதே­வேளை சவூதி மக்கா, மதீ­னாவில் அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டா­வண்ணம் பாது­காப்புப் படை­யினர் உஷார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். 

கட்­டா­ருக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டை­யி­லான உறவு பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருக்­கிற நிலையில் சவூ­தியில் மக்கா, மதீ­னாவில் விமான நிலை­யங்­களில் உளவுப் பிரிவின்  சிவில் உடையில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அவர்கள் தமிழ், உருது மற்றும் அர­பு­மொழி பேசக்­கூ­டி­ய­வர்­க­ளாவர். 

எனவே எமது  ஹஜ்­யாத்­தி­ரிகள் கட்டார், சவூதி  அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் நில­வி­வரும்  பிரச்­சினை தொடர்­பாக எவ­ரு­டனும்  கலந்­து­ரை­யா­டக்­கூ­டாது. மற்றும் இந்தப் பிரச்­சினை தொடர்­பாக விமர்­சிக்கக் கூடாது. 

ஒரு நாட்டை  ஆத­ரித்­துப்­பே­சவோ, ஒரு­நாட்டை  எதிர்த்துப் பேசு­வதோ தவிர்க்­கப்­ப­ட­வேண்டும் மற்றும்  ஐ.எஸ்.தீவி­ர­வாதக் குழு தொடர்­பாக கருத்து  வெளி­யி­டவோ விவா­திக்­கவோ கூடாது. எவ­ரது  கருத்­துகள், பேச்­சுகள் தொடர்பில் சந்­தேகம்  நில­வு­மாயின் சவூ­தியில் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்ள  விஷேடப் பாது­காப்புப் பிரி­வினர் அவ்­வா­றா­ன­வர்­களைக்  கைது செய்து விசா­ரணை  நடத்­தவுள்­ளார்கள். 

இலங்கை  ஹஜ் ­யாத்­தி­ரி­கர்­களின் இலக்கு அமல்  செய்­வ­தாக மாத்­தி­ரமே இருக்­க­வேண்டும். சவூதி,  கட்டார் மற்றும் ஏனைய நாடு­களின் செயற்­பா­டு­களை  விமர்­சிப்­ப­தாக இருக்­கக்­கூ­டாது. 

ஹஜ் ­யாத்­தி­ரி­கர்கள் தமது நாவினைப் பேணி நடந்து  கொள்­வது அவ­சி­ய­மாகும். நாம் வெளி­யிடும் அல்­லது  விமர்சிக்கும்  கருத்துகளில் சந்தேகம் ஏற்பட்டால் சவூதி அரசாங்கம் கைது செய்து விசாரணை நடாத்தும். எனவே ஹஜ்யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களை மதித்து தமது ஹஜ் கடமையைப் பூர்த்தி  செய்து கொள்ள வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.