Header Ads



’ஊழலில் ஈடுபட்டோரின் குடியுரிமையை, இரத்துச் செய்யவேண்டும்’

தற்போதுள்ள அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்த அனைத்து நபர்களினதும் குடியுரிமை இரத்து செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும், மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, அவரது சொந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களின் குடியுரிமையை இரத்து செய்தமையை உதாரணமாகக் கொண்டு, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

' மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மாத்திரமே, ஊழலுக்கு எதிரான சரியான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எந்தவொரு அரசாங்கமும், ஊழலுக்கு எதிரான சரியானதொரு தீர்மானத்தை இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை' என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.