Header Ads



ISIS இல் இணையவா, கராட்டி பழக வந்தீர்கள் - முஸ்லிம் மாணவனிடம் நையாண்டி

கண்டியிலுள்ள மதிப்பாக போற்றப்படும் பல இனங்கள் கல்வி பயிலும் பிரபலமான பாடசாலையில் 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ஒரு முஸ்லிம் மாணவன் அப்பாடசாலையிலுள்ள கராட்டிக் கழகத்தில் சேர்வதற்காக சென்ற போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள், "ISIS இல் இணைவதற்காகவா கராட்டி பழக வந்தீர்கள்.?" என்று நையாண்டி செய்து, அவரைக் குழப்பியிருக்கிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அவர் அந்த கழகத்தில் சேரவில்லை.

இனரீதியாக முடுக்கிவிடப்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக தேசிய ரீதியாக நஞ்சுட்டப்பட்ட இன விரோத கருத்தியலை பெரியவர்களோடு வளரும் எதிர்கால சந்ததியினரும் உள்வாங்கி இருப்பது அபாயகரமானது மட்டுமல்ல அது துரதிர்ஷ்டவசமான நிலையுமாகும். இந்த இனவாத சமூக விரோத சக்திகளை கையாளும் போது மிகவும் அவதானமானதும் நுண்ணியமானதுமான சகவாழ்வு மேம்பாட்டு பொறிமுறை ஒன்று இருப்பது அவசியமாகும்.

நாம் கையாளும் முறைகளையும் எம் சமூகத்தின் பக்கச்சார்பற்ற இன ஐக்கியத்தை நோக்கிய முன் நகர்வையும் வளரும் சந்ததியினர் கூர்ந்து அவதானிப்பதை கருத்திற் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். சந்தேகமும் மாற்றாய்ந் தாய் மனப்பான்மையும் விதைக்கப்பட்டிருப்பதால் கத்தியில் மேல் நடக்கும் நுணுக்கம் அவசியப்படுகிறது.

அரசியல் ரீதியான முரண் நிலைகள் சமூகத்தில் பெரியளவில் பிரச்சினைசளைக் கொண்டு வராது. இனரீதியான முரண்பாடுகள் அவ்வாறாதாலல்ல. சிறிய ஒரு சம்பவம் பெரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதனைத்தான் தர்கா நகரிலும் அண்மைக்கால எரிப்பு சம்பவங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

எனவே, வளரும் இளம் சமூகத்தின் பொதுஜன உளவியலை கருத்திற் கொள்ளாது, உரிய காத்திரமான நடவடிக்கைகளை முறையாக செய்யத் தவறினால் 30 வருட கால யுத்தத்தின் அபாயகரமான கோர முகங்களை கொண்ட விபரீதங்களை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க வேண்டிய அசாதாரண சூழ்நிலைகள் உருவாகலாம். 

அதனால் முஸ்லிம் சமூக அரசியல்,சிவில் சமூக சங்கங்கள், இயக்க மற்றும் குரு பீடங்கள் ஆகியன ஒன்றினணந்து, இனரீதியான முறுகல்களைக் கையாளுவதில் அரசியல் இலாப, சுய நல நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் நின்று சிந்தித்து செயலாற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.

-எம். ரிஸான் ஸெய்ன்-

No comments

Powered by Blogger.