Header Ads



இவர்கள் திருந்தவும் மாட்டார்கள், பிறரை திருத்தவும் மாட்டார்கள்...!!

மிம்பரில் பொறுமை பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த ஓர் ஆலிம் காரசாரமாக துண்டு பறக்க அணல் பறக்கும் உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் ஒலிவாங்கி கிர்.. கிர்.. என்று ஓசையெழுப்பியது.. உடனே அதனை சற்று அசைத்து சரி செய்து கொண்டார்.

திரும்பவும் அது கிர் கிர் என்று  ஓசையெழுப்பியது..

அவர் அங்கும் இங்குமாக முறைத்து முறைத்து பார்த்துவிட்டு மீண்டும் உரையைத் தொடர்ந்தார். 

அதே போன்று மூன்றாம் தடவையும்  கிர் கிர் என்று ஓசையெழுப்ப ஒலிவாங்கியை கழட்டி தூக்கி எறிந்து விட்டு கோபம் தலைக்கடிக்க தலைப்புத் தெரியாது தடமாறலானார்...

இத்தனைக்கும் அவர் பேசிய தலைப்பு 
"பொறுமை"

இந்த இடத்தில் அவரது உரையை அவரது செயல் பொய்ப்படுத்தி உள்ளது.

அதனால் பிறரிடத்தில் அது செல்வாக்கற்றுப் போய் விடுகிறது.

இது போன்று தான் சிலர் ஊரின் சீர்திருத்தம் பற்றியும் உலகின் சீர்திருத்தம் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார்கள்

கூட்டம் நடாத்தி கலந்தாலோசிப்பார்கள்.

தமக்குள் என்ன தவறுகள் இருக்கின்றனவோ அது பற்றி அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். 

அவர்களது தவறுகளை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் சமூகம் அவர்களை விட்டு விரண்டோடுவதும் இதனால் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை.

தூய எண்ணத்துடன் பிறரால் சுட்டிக்காட்டப்படும் தமது தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கு பகரமாக தவறை சுட்டிக்காட்டியவர்களை வாய்க்கு வந்த படி இல்லாத பொல்லாதவைகளை இட்டுக்கட்டி அவதூறு பரப்பித்திரிவார்கள்.

இவர்கள் தான் தம்மை வருத்திக் கொள்ளும் வங்குரோத்து வியாபாரிகள்.

இந்நிலை மாறாத வரை..

By - Shk TM Mufaris Rashadi.

No comments

Powered by Blogger.