Header Ads



யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கு மக்களை வழிநடத்த தெரியவில்லை, இராணுவமே அவசியம்

வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்­வைக்கும் கார­ணிகள் அனைத்தும்  அர­சியல் சார்ந்­த­தாகும். அவர் அர­சியல் மேடை­களில் பொது மக்கள் முன்­னி­லையில் முன்­வைக்கும் கார­ணிகள் குறித்து நாங்கள் குழப்­ப­ம­டைந்­த­தில்லை. இனியும் குழப்­ப­ம­டையப் போவ­து­மில்லை என புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள லெப்­டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.  யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கோ, சிவில் நிரு­வா­கத்­தி­ன­ருக்கோ மக்­களை சரி­யாக வழி­ந­டத்த தெரி­ய­வில்லை.  இரா­ணு­வமே அவ­சி­ய­மா­கி­யுள்­ளது எனவும் குறிப்­பிட்டார். 

வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் என வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் எனது நல்ல நண்பர். அவர்  ஒரு அர­சி­யல்­வாதி, இரா­ணு­வத்தை வைத்து அவர் அர­சியல் செய்­கின்றார், நாம் இரா­ணு­வத்தில் உள்ளோம். எனினும் என்­னு­டைய நல்ல நண்பர் அவர். அவர் முன்­வைக்கும் கார­ணிகள் அனைத்தும்  அர­சியல் சார்ந்­த­தாகும். அவர் அர­சியல் மேடை­களில் பொது­மக்கள் முன்­னி­லையில் முன்­வைக்கும் கார­ணிகள் குறித்து நாங்கள் குழப்­ப­ம­டைந்­த­தில்லை.

இனியும் குழப்­ப­ம­டையப் போவ­து­மில்லை. குழப்­ப­ம­டைய வேண்­டி­யது அர­சியல் வாதிகள் மாத்­தி­ர­மே­யாகும் . நாம் சேவை செய்­கின்றோம். அதுபோல் உண்­மை­யான நிலை­மைகள் என்­ன­வென்­பது எமக்கு தெரியும். ஆகவே விக்­னேஸ்­வரன் முன்­வைக்கும் கார­ணிகள் தொடர்பில் எவரும் குழப்­ப­ம­டைய அவ­சியம் இல்லை. 

இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அர­சி­ய­லுக்கும் இடையில் எந்த தொடர்பும்  இல்லை. அர­சியல் வாதி­களின் கார­ணி­க­ளுக்கும் நாம் செவி சாய்க்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. பதில் கூற­வேண்­டிய கட­மையும் இல்லை. மேலும்  யாழ்ப்­பாணம் தான் பணி­யாற்ற  மிகவும் கடி­ன­மான பகு­தி­யாகும். அங்கு சேவை செய்­வது என்­பது கடி­ன­மான கார­ணி­யாகும். எனினும் நான் அங்கு பணி­யாற்­றி­யுள்ளேன்.

மக்­களின் மனங்­களை நான் ஆராய்ந்­துள்ளேன்.  இரா­ணுவம் எப்­போதும் அச்­சு­றுத்­த­லான சூழலில் மக்­க­ளுடன் செயற்­பட வேண்டும். ஆனால் யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில் அர­சியல் வாதி­க­ளுக்கோ, சிவில் நிரு­வா­கத்­தி­ன­ருக்கோ மக்­களை சரி­யாக வழி­ந­டத்த தெரி­ய­வில்லை. அல்­லது அவர்­க­ளுக்கு அந்த தலைமைத்துவமும் இல்லை. இராணுவமே அவசியமாகியுள்ளது.

எனினும் எதிர்வரும் காலங்களில் சிவில் தலைமைத்துவம் அவசியமாகும். அதை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளும் மக்களுக்கான  செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.