Header Ads



நோன்பு மாதத்தில் பொது இடத்தில், புகைப்பிடித்தருக்கு சிறைத் தண்டனை

முஸ்லிம்களின் புனித நோன்பு மாதத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்த ஒருவருக்கு துனீஷிய நீதிமன்றம் ஒன்று ஒரு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

பிசர்தே நகர நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் புகைப்பிடித்துக் கொண்டிருந்த நபருக்கு எதிராக நீதித்துறை அதிகாரி ஒருவர் பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான சிறைத் தண்டனை அமுலுக்கு வரும் முன் மேன்முறையீடு செய்ய 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நோன்பு நேரத்தில் பொது இடத்தில் சாப்பிட்டதற்காக கடந்த ஜூன் முதலாம் திகதி நால்வருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரமலான் காலத்தில் பொது இடத்தில் உண்பது அல்லது குடிப்பதற்கு எதிராக சட்டங்கள் எதுவும் இல்லாத போதும் துனீஷியாவில் ஒவ்வொறு ஆண்டும் இந்த நடைமுறை இருந்து வருகிறது.

எனினும் நோன்பு காலத்தில் உணவு உட்கொள்ள மற்றும் குடிப்பதற்கு உரிமை கோரி துனீஷிய தலைநகரில் பல டஜன் பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments

Powered by Blogger.