Header Ads



ரிஸ்வி முப்தியின் கோரிக்கைக்கு, பொதுபல சேனா பச்சைக்கொடி

-ARA.Fareel-

பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீது சுமத்­தி­வரும் குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­வு­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு ஜனா­தி­பதி சுயா­தீனக் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்­துள்ள வேண்­டு­கோளை பொது­ப­ல­சேனா அமைப்பு வர­வேற்­றுள்­ளது.

உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி விடுத்­துள்ள வேண்­டு­கோ­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வ­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே 'விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் டிலன்த விதா­னகே தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

எமது அமைப்பு முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் எதிர்க்­க­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளையே எதிர்க்­கிறோம். அவர்கள் தொடர்­பி­லேயே நாம் முறை­யி­டு­கிறோம். அவர்­க­ளையே சந்­தே­கிக்­கிறோம். எனவே நாம் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் எதிர்க்­கிறோம் என தவ­றாக அர்த்தம் கொள்­ளக்­கூ­டாது.

ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீனக் குழுவில் அங்கம் வகிப்­ப­வர்கள் யார் என்­பது தொடர்­பிலும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுயா­தீனக் குழுவின் சிபா­ரி­சுகள் மூலம் பிரச்­சி­னைகள் சுமு­க­மாகத் தீர்க்­கப்­ப­டு­மென்றால் நாமும் மகிழ்ச்­சி­ய­டைவோம்.

நிய­மிக்­கப்­படும் குழு­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் பெரும்­பான்மைச் சமூகம் எதிர்­நோக்கும் சவால்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் முன்­வைக்கத் தயா­ராக உள்ளோம். 

ஞான­சார தேரரும் பிரச்­சி­னை­களை மகா­நா­யக்க தேரர்களின் வழிகாட்டல்களின் கீழ் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கே விரும்புகிறார் என்றார். 

No comments

Powered by Blogger.