Header Ads



விக்னேஸ்வரன் வரம்பு மீறுகிறார் - மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில்முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார்.

வரம்பு மீறிச் செயற்படும்அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின்பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம்செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன்நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும்தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்கதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அவர் வழிவிடவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகளின் தலைவர்களிடம் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தனதுயோசனையை அவர் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத்தமிழரசுக் கட்சியின் தலைவரான தன்னுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பில்இன்னமும் பேசவில்லை என்று மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அதிகஉறுப்பினர்களைக்கொண்டது கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத்தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் தலைவரான என்னுடன் அமைச்சரவை மாற்றம்தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னமும் பேசவில்லை. அவர் என்னுடன்பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில், அவர் வரம்பு மீறிச்செயற்படுகின்றார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின்பரிந்துரைக்கு மாறாகவும், கூட்டமைப்பின் கொள்கை மற்றும் கடப்பாட்டுக்குமுரணாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

No comments

Powered by Blogger.