Header Ads



தாயின் துஆ, ஹமாஸ் தலைவனின் உயிரைக் காப்பாற்றியது

ஒரு தாயின் துஆ எப்பொழுதும் சக்தி வாய்ந்தது. அவளது அன்பின் ஆழத்தையும், துஆ வின் சக்தியையும் அறிவதற்கு இந்த சம்பவத்தை வாசித்துப் பாருங்கள்.

தற்பொழுது ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் ''காலித் மிஷ் அல்'' அவர்கள் இளமைப் பருவத்தில் இருக்கும் பொழுது ஒரு நாள் தனது தாயிடம் வந்து ''நான் உங்களுக்கு அருகே இருந்து அல்லாஹ்விடம் ஒரு துஆ கேட்பேன். அதற்கு நீங்கள் ஆமீன் கூற வேண்டும்.'' என்று வேண்டிக்கொண்டார். அதற்கு அவரது தாயும் சம்மதித்த பொழுது அவர் அல்லாஹ்விடம் பின்வரும் துஆவினைக் கேட்கிறார். ''யா அல்லாஹ்! நான் உனது பாதையில் போரிட்டு ஷஹீத் ஆவதற்குரிய பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாயாக...!''

இந்த துஆவினைக் கேட்டதும் அத்தாய் தன் மகன் மீது உள்ள பாசத்தின் காரணமாக ஆமீன் கூற மறுத்துவிட்டாள். இவர் பல தடவைகள் தன் தாயை வற்புருத்தியும் தன் மகன் மீதுள்ள பாசம் மேலிட்டதனால் அவள் ஆமீன் சொல்லவில்லை. இறுதியில் அத்தாய் அவரிடம் ''நான் அல்லாஹ்விடம் ஒரு துஆவைக் கேட்கிறேன் அதற்கு நீ ஆமீன் கூறு.'' என்று சொல்லிவிட்டு அவர் அல்லாஹ்விடம் இவ்வாறு பிரார்த்திக்கிறார் ''யா அல்லாஹ் எனது மகனுக்கு நீண்ட ஆயுலை வழங்கி அதற்கு பிறகு ஷஹாதத்தை வழங்குவாயாக...!'' அதற்கு அவர் ஆமீன் கூறினார்.

இவ்வாறு துஆ கேட்டதன் பிறகு காலங்கள் உருண்டோடின. சுமார் 17 வருடங்களுக்கு முன்னர் 1997ம் ஆண்டு காலித் மிஷ் அல் இற்கு 41 வயதாக இருக்கும் பொழுது இஸ்ரேலிய உளவுத்துறையைச் சேர்ந்த இருவர் ஜோர்தானில் வைத்து அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த நஜ்சு ஊட்டினர். உடனே அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் மரணத் தருவாயில் இருக்கு பொழுது அவரது தாய் கேட்ட ''தனது மகன் ஷஹீத் ஆக வேண்டும்'' என்ற துஆ வின் அரை பகுதி நிறைவேறியது. ஆனால் ''நீண்ட ஆயுலைக் கொடுக்க வேண்டும்.'' என்ற மற்றய பகுதி நிறைவேறவில்லை.

இந்நிலையில் தான் அந்த தாயின் துஆவின் மகிமையை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். இவருக்கு நஜ்சு ஊட்டிய அந்த இரு யூத உளவாளிகளும் ஜோர்தானில் வைத்து கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமாயின் தான் இடும் இரு நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்பட வேண்டும் என்று ஜோர்தான் மன்னர் ஹுஸைன் இஸ்ரேலிற்கு அறிவிக்கிறார். அப்பொழுது இஸ்ரேலும் வேறு வழியில்லாம அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறது. அவர் இட்ட நிபந்தனைகளில் ஒன்று ஷேய்ஹ் அஹ்மத் யாஸீனை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். இரண்டாவது நிபந்தனை காலித் மிஷ் அல்லிற்கு ஊட்டப்பட்ட நஜ்சிற்கான மருந்தை காட்டித் தர வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் அஹ்மத யாஸீனையும் விடுதலை செய்து, அந்த நஜ்சிற்கான மருந்தையும் சொல்லிக் கொடுத்தது. இதன் விளைவாக அல்லாஹ்வின் அருளால் ஒரு வியாழன் நஜ்சு புகட்டப்பட்டு கோமா நிலையை அடைந்த காலித் மிஷ் அல் இரு நாட்கள் கழித்து சனிக் கிழமை கண் விழிக்கிறார்கள். அவர் கண் விழித்ததும் ''ஜும் ஆவிற்குரிய நேரம் வந்துவிட்டதா?'' என்று தான் முதலில் வினவினார்கள். சுப் ஹானல்லாஹ்.

அல்லாஹ்வின் நாட்டத்தாலும், அவரது தாய் கேட்ட துஆவினாலும் அன்று அவர் மயிரிழையில் உயிர் தப்பி இன்று 58 வது வயது வரைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அன்று அவரது தாய் கேட்ட துஆ இன்று வரைக்கும் கபூல் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒரு தாயின் துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் எவ்வளவு அந்தஸ்து இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள இந்த சம்பவம் ஒன்றே போதுமானது.

சுபஹானல்லாஹ்.

இஸ்லாமிய ஆய்வுகள்

4 comments:

  1. Masahallah this person very smart and very good religeost following person too!May allah give him long life.

    ReplyDelete
  2. இவர்களைத்தான், பயங்கரவாதிகள் என்று யஹுதி அரேபியாவும் பாசிச கூட்டாளிகளும் கூறுவது தங்களின் கதிரைகளை அரபு வசந்தத்திலிருந்து பாதுகாக்கும் முயட்சியே,.யா அல்லாஹ் இவர்களை ( சல்மானையும் + அவன் சார்ந்த வர்களையும்) நாசமாக்கிவிடு ஆமீன் !.

    ReplyDelete
  3. May Allah Bless all our brother's who fight for their rights and masjidul Aqsa.
    Protesting against a Muslim ruler even if he is not good to people but keeps praying Allah , is not allowed from the sunnah of Muhammad Sal. So called Arab spring is not permissible in view of Islam. But for who follow the sunnah of Hawarij May be ok

    ReplyDelete

Powered by Blogger.