Header Ads



நான் ஜுனைத் பேசுகிறேன்..!


நான் தான் ஜுனைத் பேசுகிறேன். என் இஸ்லாமிய சகோதரனே நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது வீட்டில் உள்ளவர்களிடம் போய்ட்டு வருகிறேன் என்று சொல்லாதீர்கள்.
இப்போது செல்கிறேன் மீண்டும் வருவேனா என்று தெரியாது என்று சொல்லிவிட்டு செல்லுங்கள்.
அப்படி சொல்லும் அளவிற்கு இந்திய திருநாடு ஆக்கிவைத்து விட்டது.
ஏனென்றால் அத்தர் வாடையில் பெருநாள் கொண்டாட வேண்டிய உங்களை என்னுடைய ரத்த வாடையில் பெருநாள் கொண்டாட வைத்து விட்டது இந்திய திருநாடு...
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் விதிவிலக்காக இருக்கலாம், உத்தர பிரதேஷ், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
உங்களை போன்று நானும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாடலாம் என்று தான் என் அண்ணனோடும், என் நண்பர்களோடும் புத்தாடை வாங்கிவிட்டு ரயிலில் ஊர் திரும்பினேன்.
பாஜகவை சேர்ந்த சிலர் ரயிலில் ஏறி நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழும்ப சொன்னார்கள். இவர்களோடு என்ன பேச்சு என்று நால்வரும் கிளம்பி அடுத்த கம்பார்ட்மெண்டுக்கு சென்று விட்டோம்.
இருப்பினும் காவி நிறம் வெறிகொண்ட அந்த கொலைக்கார கும்பலுக்கு சிகப்பு நிற இரத்தம் பிடித்து விட்டதால் நோன்பு வைத்திருந்த எங்களை மாட்டிறைச்சி சாப்பிட்டோம் என்று கூறி எங்கள் நால்வர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
நான் குர்ஆன் மனனம் செய்தவன், நான் ஒரு ஹாபிழ், நோன்பு வைத்திருக்கும்போது மதரஸா ஹஜ்ரத்தோ, பெற்றோர்களோ யாருமே அடிக்க கூட மாட்டார்கள். நான் நோன்பாளி என்று தெரிந்தும் என் உடம்பில் 18 இடங்களில் கத்தியால் குத்தினார்கள். என் அண்ணனையும், என் நண்பர்களையும் கொடூரமான முறையில் குத்தி குதறினார்கள்.
வலி தாங்க முடியாமல் கத்தினோம், கதறினோம்.
ரயிலில் பயணித்த யாருமே எங்களை காப்பாற்ற வரவில்லை. நான் உயிரை இழந்து விட்டேன்.
என் இஸ்லாமிய அண்ணன்களே, என்னை ஏன் நீங்கள் காப்பாற்றவில்லை, நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா ? உங்கள் கூடப்பிறந்த தம்பியாக இருந்தால் தான் காப்பாற்றுவீர்களா ? நான் உங்கள் தம்பி இல்லையா ?
அண்ணன் என்னை தான் நீங்கள் காப்பாற்றவில்லை, எனக்காக துஆ செய்யுங்கள். என் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள். என் பெற்றோரின் மன அமைதிக்காக துஆ செய்யுங்கள்.
வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக செல்லுங்கள்...
என் இந்து அண்ணன்களே நீங்கள் ஏன் என்னை காப்பாற்றவில்லை ? நீங்களும் ரயிலில் தானே இருந்தீர்கள் ? உங்களுடைய தம்பியாக இருந்திருந்தால் இப்படி தான் வேடிக்கை பார்த்திருப்பீர்களா ?
போங்க அண்ணன், உங்கள் மீது வைத்த நம்பிக்கையும் போய்விட்டது.
என்னை கொன்றவர்கள் ரயிலிலிருந்து தப்பித்து விடலாம். என் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

No comments

Powered by Blogger.