Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோர், உடனடியாக உறுதி செய்யுங்கள் - அரச ஹஜ் குழு கோரிக்கை

ARA.Fareel-

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணaப்­பித்­துள்ள விண்­ணப்ப இலக்கம் 8500 க்கு உட்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­களில் இது­வரை தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளா­த­வர்கள் உட­ன­டி­யாக பய­ணத்தை உறுதி செய்து  கொள்­ளு­மாறு அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 2840 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் இது­வரை சுமார் 2400 பேரே தமது பய­ணத்தை உறுதி செய்­துள்­ள­மை­யி­னாலே ஹஜ் குழு­வினால் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்துத் தெரி­விக்­கையில் ஒரு சில ஹஜ் முக­வர்கள்  தங்­க­ளது உற­வி­னர்­க­ளது பெயர்­களில் போலி­யான பதி­வு­களை மேற்­கொண்­டுள்­ளமை கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இறுதி நேரத்தில் இந்­தப்­ப­திவு எண்­களில் கூடுதல் கட்­ட­ணத்தில் இது­வரை திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பிக்­கா­த­வர்­களை அழைத்துச் செல்­வதே இவர்­க­ளது இர­க­சியத் திட்­ட­மாகும். இத­னா­லேயே ஹஜ் கட­மையை உறுதி செய்­ப­வர்­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தற்­போது விண்­ணப்ப இலக்கம் 8500 வரை­யி­லான விண்­ணப்­ப­தா­ரி­க­ளுடன் தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

எனவே இவ்­வ­ருடம்  ஹஜ் கடமையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள குறிப்பிட்ட விண்ணப்பதாரிகள் உடனடியாக தமது பயணத்தை உறுதி செய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.