Header Ads



பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் கலவரத்திற்கு தூபமிடும் - அநுரகுமார

முப்பது வருட யுத்தத்தின் பின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டிருக்கும் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக்களரியை உண்டாக்க அரசு இடமளிக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் வியாபார நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் இனக்கலவரமொன்றுக்குத் தூபமிட்டு வருகின்றன.

ஆரம்பத்திலேயே இந்த அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த அரசும் பொலிஸ் துறையும் தவறிவிட்டதாலேயே பிரச்சினை பூதாகரமாகியது. இந்த நாட்டில் வாழும் எந்தவொரு இனமும் மீண்டும் ஓர் இனக்கலவரத்தையோ இரத்தக்களரியையோ சந்திக்க விரும்பவில்லை.

ஒருசில சுயநலவாதிகள் இனங்களுக்கிடையிலான அமைதியைக் குலைத்து குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இலங்கையில் மீண்டும் ஓர் இரத்தக்களரி ஏற்பட்டால் விளைவுகள் பாரதூரமாகிப் போய்விடும்.

முஸ்லிம்கள் இன்று அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் அவர்களும் சமவுரிமை கொண்ட பிரஜைகள். நாட்டின் சகல துறைகளிலும் அவர்களது பங்களிப்பு இருந்து வந்துள்ளது. எனவே, அரசு மேலும் தாமதம் செய்யாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.

8 comments:

  1. why not Muslims bring jvp to power to see their activities towards bbs? one more choice

    ReplyDelete
  2. The JVP stands for equality among all communities and religions. It gives no super status to any religion. There is no State Religion. Anyone can practice a religion of his own choice. There will be equal distribution of wealth to end poverty. They will provide equal opportunity for education and employment. All languages will enjoy equal status. They will end all forms of corruption. They will establish a United, Peaceful and Harmonious country for all the people to live happily.

    ReplyDelete
  3. Yes ya mr jiffy jaufar u correct

    ReplyDelete
  4. there is no any other choice accept JVP. this time we have to give full support to JVP. because we given more times to UNP and SLP but nothing happen always same stories.those are enough.so coming election we are all need to support together for a change political culture.

    ReplyDelete
    Replies
    1. It is the JVP that can bring abou a pure political culture. Let us start the campaign among the Muslims to support the JVP.

      Delete
  5. i also agree, JVP is the only political party free of corruption.and also have a Leader who can lead nation. because anybody who changes his principle according to whom he is dealing with He is not a man who can lead a Nation.Stand up for a change

    ReplyDelete
  6. The Leadership of the JVP is not a one-man show or of a few individuals. Those at the very bottom of their membership word hard according to the principles of the party stage by stage gradually rise up to become members of the Central Committee which elects the Politbureu which in turn elects the Leader who speaks and works according to the decisions and directions of the Central Committee. It is the only party that functions according to democratic principles. In the event the leader leaves the party or he is removed for any reason there is no struggle as to who should become the next leader because there are several trained and capable people in the Central Committee to take over. When disciplinary action was to be taken against Wimal Weerawansa for suspected corrupt activities he left the party. His place of Parliamentary Spokesman was quickly filled. When Somawansa Amerasinghe was going against party principles he was removed and immediately replaced by Anura Kumara. That is the structure of the party which provides a continuity in leadership and works without any corrupt influence. Also every member of the JVP leads a simple life even by sacrificing their salaries to the party. So it is the JVP that can build-up a corrupt-free, harmonious and peaceful Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.