Header Ads



சட்டவிரோத தொழிலாளர்கள், நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் - சவூதி அரேபியா

சௌதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள பொதுமன்னிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்தது ஒரு மிலியன் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக சௌதி அரசு கூறுகிறது.

சௌதி அரேபியாவுக்கு, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலிருந்தும் குடியேறிகள் வருகிறார்கள்.

அவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு வேலை செய்கிறார்கள்.

ஆனால், கடந்த மாதம் சௌதி அரசு, 90 நாள் பொதுமன்னிப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது, அதன்படி, தமது சட்டவிரோத குடியேறி அந்தஸ்து குறித்த விவரங்களை வெளியிட முன்வரும் எவருக்கும் அபராதம் விதிக்கப்படாது அல்லது மற்றெந்த வழிகளிலும் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் .

அவர்கள் தங்களது வேலை நிலையை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ அல்லது சௌதி அரேபியாவை விட்டு வெளியேறவோ வாய்ப்பு தரப்படுவார்கள்.

1 comment:

  1. ஒரு 'டுப்லிகேட்' கிலாபாவாக செயல்பட்ட இஸ்லாமிய அரசு - ஐ.எஸ்.ஐ.எஸ் - இயக்கம் முஸ்லிம்களை தமது எல்லையுள் வந்து குடியேறுமாறு வேண்டியிருந்தனர்.

    அதுவே உண்மையான இஸ்லாமிய அரசாக இருந்தால் அது முஸ்லிம்களது உரிமையாகவே இருந்து கொண்டிருக்கும்.

    ஆனால், நபிகள் காலத்தில் போன்று இறைவனின் திருக்கலிமாவை தனது தேசியக்கொடியில் பொதித்திருக்கும் அரேபிய அரசு இஸ்லாமிய கிலாபத்தை மீளிணைப்பதத்திற்கான அணைத்துத் தகுதிகளையும் தன்னகத்தில் இறையருளால் கொண்டிருக்கிறது.

    எனவே, அது தன்னை இஸ்லாமிய அரசாக பிரகடணம் செய்ய வேண்டும். அதனோடு ஏனைய இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும். உலக முஸ்லிம்களுக்கு ஓர் முன்மாதிரியான தலைமைத்துவம் அளிக்க முன்வர வேண்டும் என்பதை சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும்.

    அதுவரை, தமது எல்லையுள் வாழும் முஸ்லிம்களை தமது சகோதரர்களாக மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு சட்டபூர்வமான உரிமையளித்து அவர்களை வெளியேற்றாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.