Header Ads



அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி, கிண்டலாக பேசினார் - டிலான் பெரேரா

இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பெருத்தமற்றது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது என்பதற்கான உதாரணங்கள் நாட்டின் வரலாற்றில் உள்ளது.

அரசியல் நிர்வாகமும் இராணுவ நிர்வாகம் என்பது வெவ்வேறானவை. இதன் காரணமாகவே இராணுவத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிட்டதால் சரத் பொன்சேகாவை மக்கள் தோற்கடித்தனர்.

ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கிண்டலாக பேசினார். இதனால், அரசியலில் இருந்து விலகி இராணுவத்திற்கு சென்றால் நல்லது என பொன்சேகாவிடம் ஜனாதிபதி கூறினார்.

இராணுவத்தில் இருக்கும் போது அவர்கள் திறமைசாலிகள். அது சரத் பொன்சேகாவுக்கும் பொதுவானது. கோத்தபாய ராஜபக்சவும் பொதுவானது.

ஏனையோருக்கும் அப்படியே. எனினும் இவர்கள் அரசியலுக்கு வந்ததும் முற்றாக தோற்று போய் விடுகின்றனர் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.