Header Ads



கபீர் ஹாஷிமின் விளக்கம்..!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுப்படமாட்டார். அத்துடன் எமது நாட்டின் எந்தவொரு துறைமுகத்தையும் நாம் விற்கமாட்டோம். தற்போது திருகோணமலையின் 14 எண்ணெய் குதங்கள் இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கும் ஏனைய 10 குதங்கள் இலங்கைக்கும் உரித்தாகின்றது. மீதமுள்ள 74 குதங்கள் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்படவுள்ளது. மாறாக முழு உரித்துரிமையும் இந்திய நிறுவனத்திற்கு வழங்க போவதில்லை என அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களில் எந்தவொரு உண்மையும் கிடையாது. முன்னைய ஆட்சியின் போது சீன தலைவர்கள் வருகை தந்த போது எமது தேசிய கொடியை உயர்த்த முடியவில்லை. எனினும் தற்போது அப்படியல்ல. எந்தவொரு நாட்டிற்காகவும் நாம் எமது இறையான்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

எம்.எம்.மின்ஹாஜ்

No comments

Powered by Blogger.