Header Ads



ஹக்கீம - ரிஷாட் இணைந்து செயற்பட இணக்கம் - உலமா சபை கூட்டத்தில் தீர்மானம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வில்­பத்து மாவில்லு பேணற் தகு வன­பி­ர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் விவ­கா­ரத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமூம் ரிசாத்­ப­தி­யு­தீனும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­லய கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யான சந்­திப்பில் இவ்­வி­ணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இச்­சந்­திப்பில் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களும் சிவில்­அ­மைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் பங்கு கொண்­டனர்.

எதிர்­வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­மை­யி­லான குழு­வி­னரும் அமைச்சர் ரிசாத்­ப­தி­யுதீன் தலை­மை­யி­லான குழு­வி­னரும் வில்­பத்து பிர­தே­சத்­துக்கு  நேரடி விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

இக்­கு­ழு­வினர் ஒரு­மித்து ஜனா­தி­ப­தி­யிடம் வன பிர­க­டன அறி­வித்­த­லினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களைச் சந்­தித்து அவர்­களின் கருத்­துக்­களைப் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளனர்.

கலந்­து­ரை­யா­டலில் உல­மா­சபை, தேசிய ஷூரா சபை, முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள், முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், சிவில் அமைப்­புகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து சமூ­கத்தின் பொதுப் பிரச்­சி­னைகள் தொடர்பில் குறிப்­பாக வில்­பத்து விவ­காரம், முஸ்­லிம்­களின்   மீள் குடி­யேற்றம், ஆகிய வற்­றிக்கும் குரல்­கொ­டுப்­ப­தா­கவும் செயற்­ப­டு­வ­தாவும் தெரி­விக்­கப்­பட்­டது.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்­கி­டையே ஏற்­படும் கருத்து முரண்­பா­டு­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்  உல­மா­சபை முன் வந்து சம­ரசம் செய்து வைக்க முன்­வர வேண்டும் என்ற ஆலோ­சனை அனை­வ­ராலும்  ஏக­ம­ன­தான ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­ப­தியின் வில்­பத்து வன பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்­தலை மீளப்­பெறச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்­டிய சந்­தர்ப்பம் ஏற்­பட்டால் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் அதற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­வ­தெ­னவும் இணக்கம் ஏற்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்­குழு சந்­தித்து ஜனா­தி­ப­தியின் வன பிர­க­டன அறி­வித்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இச்சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நவவி, சல்மான், மஹ்ருப், முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி உட்பட  மற்றும் பலர் கலந்து கொண்டனர். சமுகமளிக்காத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாமைக்கான காரணங்களை அறிவித்திருந்தனர்.



-ARA.Fareel-

7 comments:

  1. அல்லாஹு அக்பர்
    இது நடந்துவிட்டால் நமக்கும் சூடு சொரனை
    இருக்கிறது உருதிப்படும்
    உலமா சபை இப்படி திரைக்குப்பின்னால்
    செயற்படுவதுதான் சமூகத்துக்கு நல்லது

    ReplyDelete
  2. Alhamdulillah .A real feather in ACU cap . A collective approach is highly appreciated at a critical momemts shedding petty sabre rattling .

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உள்ளங்களை ஆளக்கூடிய றப்பே இவர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி விடு,முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வழி ஏற்படச் செய்வாயாக,

    ReplyDelete
  4. A good change of heart between the two muslim political partied and this could result in quick and speedy action to resolve the matter in hand and Wilpattu. We will pray for its success.

    ReplyDelete
  5. இந்த ஒற்றுமை என்னும் கயிற்றை தொடர்ந்தும் பலமாக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் .நீங்கள் வெற்றியடைவீர்கள் .

    ReplyDelete
  6. Will it happen? We have to wait and see. Hakeem is a hypocrite. He will change his mind every seconds to suit his requirements.
    Also he will try to dominate Rishard. Rishard has to take all leg works and Hakeem will get credit. Ultimately, it will endup in failure.

    ReplyDelete
  7. PLEASE DO NOT MAKE STATEMENTS. DO IT AND SHOW. GET OUT OF THE GOVERNMENT NOW AND SHOW WHAT POLITICAL POWER GOD ALLMIGHTY ALLAHA HAS BLESSED UPON US (21 Muslim MP's), Alhamdulillah, Insha Allah.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. IT IS ONLY THIS NEW POLITICAL FORCE that can fight/tame this "Yahapalana government", STOP THESE DECEPTIVE HILMY AHAMED and A.M.AMEEN, THE SLMC, ACMC and THE ACJU FROM GATHERING THE MUSLIM VOTERS TO THE UNP SIDE/CAMP OF THE "YAHAPALANA GOVERNMENT" AND WIN THE FUNDAMENTAL RIGHTS OF THE MUSLIMS OF SRI LANKA AT LARGE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.