Header Ads



சமூக இணையத்தளம் ஒன்றினால் 2500 ரூபாய் பெற்று, கொழும்பில் பார்டி - பொலிஸாரால் முற்றுகை

கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெருந்தொகை மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒருவரை கொழும்பு விசேட கலால் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

விஸ்கி, பிரெண்டி, ரம், வோட்கா மற்றும் பியர் உள்ளிட்ட பெருந்தொகை மதுபானங்கள் கலால் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

பிரபல ஹோட்டல் ஒன்றில் இளைஞர் - யுவதிகள் பங்கேற்கும் விருந்து உபசார நிகழ்வில் விற்பனை செய்வதற்காக இந்த மதுபானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூக இணையத்தளம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வில், 1500க்கு மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த மதுபானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மதுபான விருந்திற்காக வருகைத்தந்திருந்த அனைத்து இளைஞர் யுவதிகளும், 19-26-27 வயதிற்கு உட்பட்டவர்களாகும். இதில் கலந்து கொள்வதற்கான அனுமதி கட்டணமாக 2500 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

விருந்தில் கலந்து கொண்டவர்களில் கஞ்சா வைத்திந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.