Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்காக, இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவோம்

முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினை தொடர்பில் அரபு, முஸ்லிம் நாடுகளின் அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது சிங்கள பேரின சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியதன் காரணமாகவே அவரை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்கு முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக அணி திரண்டிருந்தது.

அதேவேளை கடந்த ஜானாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மீது முஸ்லிம் மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்து, எவ்வித நிபந்தனையுமின்றி அவரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை அனைத்தையும் வீணடிக்கும் வகையில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் தொடர்வதானது எம்மை கவலையடையச் செய்கிறது.

முசலி என்பது முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசம் என்பதை மறுதலித்து, அதனை வில்பத்து வனப் பகுதியுடன் இணைக்கும் வர்த்தமானி பிரகடனத்தை ஜனாதிபதி வெளியிட்டிருப்பதானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதொரு நடவடிக்கையாகும். பேரின சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொடுத்த ஒரு சமூகத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு மைத்திரி துணிந்திருப்பதானது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நீண்ட காலக் கனவுடன் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறுவதற்காக அங்கலாய்க்கின்ற தருணத்தில் இப்படியொரு அநியாயம் முசலிப் பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகையினால் வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படும் வரை இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் முசலிப் பகுதி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராக வேண்டும். சில இடங்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். இது வரவேற்கப்பட வேண்டிய செயற்பாடாகும். அதில் நமது மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்று, எமது ஒற்றுமையையும் சக்தியையும் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.

தமது காணி உரிமைக்காக கோப்பாப்பிலவு மக்கள் 29 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டமும் அதற்கு ஆதரவாக வடக்கு- கிழக்கில் அனைத்து தமிழ் பகுதிகளிலும் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவுப் பேரணிகளை நடத்தியதையும் முஸ்லிம்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

இது தவிர முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் முசலி விடயத்தில் கூட்டாக செயற்பட்டு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்விடயத்தில் முஸ்லிம்களின் நியாயத்தை புரிந்து கொண்டு, விட்டுக்கொடுப்புடன் செயற்பட ஜனாதிபதி முன்வரா விட்டால் அரபு, முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (OIC) உதவியை நாடுவோம்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போனபோது எனது ஏற்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தூதுக்கு குழுவொன்று இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் தலைவர்களை சவூதி அரேபியாவில் சந்தித்து முறையிட்டதன் பேரில் அந்த அமைப்பின் அழுத்தம் மஹிந்த அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட்டதையும் முஸ்லிம் நாடுகளின் நல்லெண்ணெத்தை இழக்க நேரிட்டதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.    

சமூகம் என்று வருகின்றபோது பதவிகளை தூக்கி வீசி விட்டு மக்களுடன் களமிறங்க அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனைப் பொறுத்தளவில், கடந்த ஜானாதிபதித் தேர்தலின்போது பதவியை மட்டுமல்ல உயிரையும் துச்சமாக மதித்தே மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கனுப்பும் போராட்டத்தில் குதித்து, தனது நேர்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய ஒரு தேசிய தலைவராவார்.

அத்தகையதொரு தலைவர் வழியில் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் இத்தருணத்தில் சமூகத்திற்காக தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும். வில்பத்து மற்றும் முசலி விவகாரம் ரிஷாத் பதியுதீனின் சொந்தப பிரச்சினை என்று கூறிக் கொண்டு, தூர நிற்காமல், அது ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிம் அகதிச் சமூகத்தின் வாழ்விடப் பிரச்சினை என்பதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் முசலி மக்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன்.

அது மாத்திரமல்லாமல் இந்நாட்டு மக்கள் அனைவருக்குமான ஓர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் சாத்வீகப் போராட்டத் தலைமை என்ற வகையிலும் இரா சம்பந்தன் அவர்களும் தனது கருணைப் பார்வையை செலுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார். 

10 comments:

  1. ஜெமீல் அவர்களே நீங்கள் பூமியில் வாழ்கின்றீரா அல்லது செவ்வாய்கிரகத்தில் இருக்கின்றீரா நீங்கள் கற்பனை செய்கின்ற இந்த அரபு முஸ்லிம்நாடுகள் உங்கள் என்ன உதவிகள் செய்யுமென்று நினைக்கின்றீர்! உங்களுக்கு தெரியுமா நீங்கள் உதவிகோர நினைக்கும் இந்த நாடுகளில்தான் முஸ்லிம்கள் பெரும் ஆபாத்தான நிலைமைக்கு தல்லப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள் என்று? நமக்கு அன்மையில் உள்ள பர்மாநாட்டில் என்ன நடகின்றது அதுபோல் பலநாடுகளி்ல் இன்று அதிகம் அனியாயமாக முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள் இவ்களுக்கெல்லாம் உதவிசெய்யாத இவர்கள் உங்களை வந்து காப்பாற்ற போகின்றார்களா? ஏன் இன்னும் கிணற்றுத் தவளைகள் போன்று வாழ்கின்றீர்!!!

    ReplyDelete
    Replies
    1. அவர் சாதித்துக் காட்டியிருக்கும் ஒருவர். இதிலும் சமூகத்துக்காகச் சாதிப்பார். இதனால் உங்களுக்கென்ன குறை வந்துவிடப்போகிறது?

      Delete
  2. Beleive only allah.his great at all

    ReplyDelete
  3. Yws. Don't go and ask for help from puppet Arab leaders. Try to find a solution harmoniously with the help of all concerned persons. They can't even solve Palestinian issue until now.

    ReplyDelete
  4. We must have our own plans to protect ourselves from
    tensions like these . If we don't have one now , we
    need to get one ready . No point of threatening to
    use the influence or power of someone else at once .
    There are chain of events coming after minorities
    to break their strength and self confidence . First
    thing , do not lose your calm and panic like all is
    lost ! A govt is in power to take decisions on all
    matters and on the whole nation . When the
    politicians play games , they know they are into
    games and they also know the risks. My3 and Ranil
    will not harm the minorities just to make the
    majority happy and the day they choose to do that
    will be the day they will go home and their
    parties will bite the dust for as long as they
    can remember . Anti-Muslim elements are working
    day and night to exhibit My3 and Ranil as
    minority leaning leaders in order to convince
    the majority Sinhalese not to trust them .So,
    cases like Wilpattu are traps to catch them
    and that is why racist elements turning the
    lights on Wilpattu issue on a regular basis.
    What the anti My3 Ranil forces want all is ,
    creating a lawless situation so that they
    can escape from fraud and corruption charges
    levelled against them. Muslims will have to
    keep all this in mind and play the game very
    diplomatically without losing ground .

    ReplyDelete
  5. "The Muslim Voice" had warned about this government and what will befall the Muslim community in almost all of it's comments in this social media and other news internet news websites. Hilmy Ahamed "Convener" of the (so-called) Muslim Civil Society Coalition now formed (for convenience to DUPE the Muslim Community) to make a "HUE AND CRY" of the atrocities of the "Yahapalana Government" against the Muslims Community and the so-called Vice President of the Muslim Council of Sri Lanka, N.M.Ameen, the so-called President of the Muslim Council of Sri Lanka ( a label forum of so-called Muslim Civil Society grouping" and Chairman of the Muslim Media Forum holding that position for the last 20 years "UNDEMOCRATICALLY" have been stooging this "YAHAPALANA GOVERNMENT" since the Presidential and General Elections of 2015 and denouncing all the protest and claims made by "Patriotic Muslim Forces" who were warning about this situation that will be befalling our community, Insha Allah. They along with the "deceptive Muslim politicians and leaders including the ACJU" were enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas LIKE THIS by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut and free foreign trips. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. NOW HILMY AHAMED and N.M. AMEEN WHO HAVE BEEN SIDELINED MY PRESIDENT MAITHRIPALA SIRISENA ARE ANGRY WITH THE PRESIDENT SIRISENA. So this is "another RUSE to work out a political lobbying plan to distance the Muslim Votes "AWAY" from the Maithripala (Hansaya group) and gather it to support the "RANIL - UNP camp" of the "Yahapalana Government.

    WHERE IS RISHAD BATHIUDEEN NOW? WHERE IS ATTORNEY-AT-LAW SIRAZ NOOR DEEN? "THE MUSLIM VOICE" UNDERSTANDS THAT RISHAD BATHIUDEEN HAS SACKED HIM FROM THE POST OF CONSUMER AUTHORITY COUNCIL AND ANOTHER MUSLIM LAWYER HAS BEEN APPOINTED IN PLACE OF HIM. WHAT ABOUT ALL THE BIG NOISES MADE BY THE ALL CEYLON MAKKAL CONGRESS. ANY WAY ALL THE TREES AND TIMBER CUT IN THE RAPING OF THE WILLPATTU RESERVE HAVE BEEN SOLD BY THE MANNAR/THARAPORAM TIMBER GANG WHO WERE OPERATING AN ILLICIT TIMBER SAWMILL IN THE MANNAR POLANARUWA ROAD. THE MAN IN CHARGE OF THIS OPERATION WAS A SIBLING OF THE HON. MINISTER. THE STATEMENT THAT THE TREES WERE CUT BY THE STATE TIMBER CORPORATION IS FALSE. FINALLY, THE POOR MUSLIMS DISPLACED MUSLIMS OF MANNAR HAVE BEEN TAKEN FOR A RIDE AND DECEIVED. THE MUSLIM VOTERS OF MANNAR HAVE STILL TO LEARN A LESSON FROM THESE DECEPTIVE, HYPOCRITICAL MUSLIM POLITICIANS, Insha Allah. The (so-called) Muslim Civil Society Coalition now formed is a political manipulation by Minister Rishad Bathiudeen using his cronies like Hilmy Ahamed, A.M.Ameen, the ACJU and innocent non-Muslim civil society organizations again to hoodwink the poor humble Muslims of the Wanni district.

    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. IT IS ONLY THIS NEW POLITICAL FORCE that can fight/tame this "Yahapalana government", STOP THESE DECEPTIVE HILMY AHAMED and A.M.AMEEN FROM GATHERING THE MUSLIM VOTERS TO THE UNP SIDE/CAMP OF THE "YAHAPALANA GOVERNMENT" AND WIN THE FUNDAMENTAL RIGHTS OF THE MUSLIMS OF SRI LANKA AT LARGE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  6. 1.3 million lives lost in Iraq, Afghanistan, and Pakistan alone since the onset of the war following September 11, 2001 ( http://www.commondreams.org/news/2015/03/26/body-count-report-reveals-least-13-million-lives-lost-us-led-war-terror)

    பார்க்க http://www.psr.org/assets/pdfs/body-count.pdf ( casualty figures after 1௦ years. இவைகளெல்லாம் நீங்கள் சொல்கின்ற முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்தவைதான்.

    சகோதரர் ஜமீல் அவர்களே. உங்களது என்னத்துக்கு நன்றிகள்.
    இப்பிரைச்சிநைகளுக்கேல்லாம் அடிப்படையான காரணம் எமது அரசியல் நிறுவனங்களிடம் முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சித்திட்டமின்மையாகும். எம்மிடம் ஒரு Contingency and Complementary plan இருக்கவேண்டும். தயவு செய்து இப்படியான கருத்துக்களைக் கூறி எம்மை மேலும் பெரும் பான்மை சமூகத்தின் மத்தியில் பியார்ச்சினையாக்கவேண்டாம்.

    ReplyDelete
  7. Noor Nizam,

    Muslim leaders have chosen to sit with every successive
    government in power not only because of power greed ,
    also for SURVIVAL IN CURRENT POLITICS ! DO NOT FORGET
    SO QUICKLY that even the giant UNP was broken into
    pieces by the previous MAHINDA RAJAPAKSHA BROTHERS to
    remain in power forever. Even steadfast JVP lost its
    firebrands . The whole of Srilankan politics is
    stinking without exception ! And you are talking of
    a new HONEST & SINCERE lot and that too from Muslims
    the weakest and the most vulnerable in the country .
    I can not stop laughing .

    ReplyDelete
  8. Jaffna Muslim,

    Where is my first reply to Noor Nizam gone ?
    That comment had a detailed answers and
    questions to him . First of all JAFFNA MUSLIM
    HAS TO TELL THE READERS ITS PURPOSE OF RUNNING
    THIS WEBSITE THEN THE READERS LIKE ME CAN
    DECIDE WHETHER TO TAKE PART OR NOT .

    ReplyDelete
  9. Jaffna Muslim,

    Commentators have been warned by Jaffna Muslim
    that commentators are RESPONSIBLE FOR THEIR
    COMMENTS . If so , what is your problem in
    publishing them ? I can not write what you
    like to hear .I would only write my mind out.
    That is what the freedom of expression is all
    about . If you are shaking to publish certain
    comments then the blog should close the
    shutters.

    ReplyDelete

Powered by Blogger.