Header Ads



சவூதியில் சட்டவிரோதமாக, தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற மூன்று மாத பொது மன்னிப்பு காலத்தை வழங்க பிரதிப் பிரதமர் மொஹமட் பின் நயிப் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதியில் இருந்து 90 நாட்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.

இந்த கால பகுதிக்குள் சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலத்திற்கு சவூதி மன்னர் சல்மான்  அனுமதி வழங்கியுள்ளார்.

சவூதி அரேபியாவில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் வீசா அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சவூதி அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தில் வெளிநாட்டவர்கள் தமது நாட்டின் தூதரகங்களின் உதவியுடன் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.