Header Ads



மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு

பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்களை பயன்படுத்தி மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியை எலெக்ட்ரை என்ற அடையாளப்படுத்தப்படுகிறது. காற்று மாசுவை குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான வர்த்தகர்களுக்காக மிகவும் பொருத்தமான வடிவத்தில் இந்த முச்சக்கர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திரங்கள் தொடர்பான பொறியியலாளர்கள் பிரிவின் பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்கவின் வழிக்காட்டலின் கீழ், இறுதியாண்டில் கல்வி கற்கும் ஹன்சிக போகஹபிட்டிய, முதித சுப்புன் மற்றும் துலாஜ் குணவர்தன ஆகிய மாணவர்களினால் இந்த முச்சக்கர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் இரண்டு பட்டரிகளில் இந்த முச்சக்கர வண்டிக்கு சக்தி வழங்கப்படுகின்ற நிலையில் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

முழுமையான திறன்களை கொண்ட இரண்டு பட்டரிகளை ஒரே முறையில் சார்ஜ் செய்வதன் பின்னர் மணிக்கு 14 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். 300 கிலோ கிராம் நிறையுடனான பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

பொதுவாக முச்சக்கர வண்டியுடன் ஒப்பிடும் போது ஏற்படும் காற்று மாசுவினை 20 வீதத்திற்கு குறைத்துக் கொள்ள கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரியாவின் புசான் நகரத்தில் இடம்பெற்ற FISITA 2016 உலக மோட்டார் வாகன காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு இந்த மோட்டார் வாகன திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு திட்டமாக இந்த முச்சக்கர வண்டி திட்டம் காணப்பட்டுள்ளது. எனினும் முச்சக்கர வண்டியை சமர்ப்பிப்பதற்கு அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் நிர்மாணித்து முடிக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு அதிகமாக இந்த முச்சகர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.