Header Ads



கொழும்பு முதலிடம்

தெற்காசியாவில் வாழ்க்கை தரத்தில் உயர் நகரமாக இலங்கையின் கொழும்பு நகரம் இடம்பிடித்துள்ளது.

லண்டனில் இருந்து செயற்படும் மர்சர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி உலகின் 231 நாடுகளில் 132வது இடத்தை கொழும்பு பிடித்துள்ளது.

இந்தியாவின் ஹைத்ராபாத் நகரம் 144வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வாழ்க்கை தரத்தில் உயர் நகரமாகவும், தெற்காசியாவின் இரண்டாவது சிறந்த நகரமாகவும் ஹைத்ராபாத் நகரம் இடம்பிடித்துள்ளது.

லண்டன் நிறுவனத்தினால் 19வது தடவையாக இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல், சமூக சூழல் மற்றும் பொருளாதார சூழல், சமூக மற்றும் கலாச்சார சூழல், மருத்துவ மற்றும் சுகாதார நிலைமை, பாடசாலை மற்றும் கல்வி, அரசாங்க சேவை மற்றும் போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள், வீடமைப்பு மற்றும் இயற்கை சூழல் ஆகிய 10 விடயங்களை ஆய்வு செய்து செய்து இந்த தரவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமை வாழ்க்கை தரம் அதிகமான நகரங்களுக்குள் உலகின் சிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியானா நகரம் மற்றும் தரம் குறைவான நகரமாக ஈராக் பெக்டேக் நகரம் இடம்பிடித்தள்ளது.

No comments

Powered by Blogger.