Header Ads



கோடீஸ்வரர் கோத்தபாய வீட்டு மீன்களுக்கு, தினமும் 15 கிலோ கோழி இறைச்சி வழங்கப்படுகிறது - பொன்சேக்கா

10 ஆயிரம் டொலர்களோடு இலங்கைக்கு வந்து, பின்னர் கோடீஸ்வராக வாழ்ந்தவரே கோத்தபாய ராஜபக்ச என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், ஒரு நல்ல அரச ஊழியர் என்று கோத்தபாயவை கூறுகின்றார்கள் ஆனால் அவரின் உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வில்லை.

உதாரணமாக கூறுகின்றேன் அவர் வீட்டில் ஒரு மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது 40 அடி நீளமும், 13 அடி அகலமும் 8 அடி உயரமும் கொண்டது.

அது அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அதிகூடிய பெறுமதியைக் கொண்டது. சாதாரணமாக 4 அடி கொண்ட தொட்டி ஒன்றை அமைக்கவே 2 இலட்சத்திற்கும் அதிகமாக விரயமாகும்.

ஆனால் கோத்தபாய அமைத்துள்ளது பிரம்மாண்டமானது. அது மட்டும் அல்ல அதில் உள்ள மீன்களுக்கு ஒரு நாளைக்கு 15 கிலோ கோழி இறைச்சி வழங்கப்படுகின்றது. மேலும் அவற்றை பராமரிக்க நாளாந்தம் பல ஆயிரங்கள் செலவு செய்யப்பட்டன.

மாதாந்தம் 80000 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒருவருக்கு இப்படியான வீட்டுச் செலவை செய்ய முடிந்தது எவ்வாறு? இது தான் நேர்மையான அரச ஊழியரா எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.