Header Ads



புதிய கண்டம் கண்டுபிடிப்பு 'சீலாண்டியா' என பெயர் வைப்பு


அவுஸ்திரேலியாவுக்கு கிழக்காக புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானிகள் அதற்கு ‘சீலாண்டியா’ என பெயரிட்டுள்ளனர்.

இது உறுதி செய்யப்படும் பட்சத்தில் 4.9 மில்லியன் சதுர கிலோமீற்றர் (1.89 மில்லியன் சதுர மைல்கள்) கொண்ட சீலாண்டியா பூமியின் எட்டாவது மற்றும் மிகச் சிறிய கண்டமாக இருக்கும்.

பசிபிக் சமூத்திரத்தில் பெரும்பாலும் நீரில் மூழ்கிய நலத்தைக் கொண்ட இந்த பிராந்தியம் பல பில்லியன் டொலர் பெறுமதியான படிம எரிபொருட்களை கொண்டுள்ளது.

நியூஸிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆளுகை பகுதியான நியூ கலெடோனியா பிராந்தியத்தை கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.

இதன்படி இந்த கண்டம் புதியதும், சிறியதும் மற்றும் அதிக நிலப்பகுதி நீரில் மூழ்கியதுமாக உள்ளது. இதன் 94 வீதமான நிலம் நீரில் மூழ்கி இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு காண்டங்கள் உள்ளன. ஆபிரிக்கா, அண்டார்டிகா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அவையாகும்.

‘சீலாண்டியா: பூமியின் மறைந்த கண்டம்’ என்ற ஆவணத்தில் ஒரு கண்டமாக ஏற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் அனைத்த நான்கு அம்சங்களும் சீலாண்டியாவில் இருப்பதாக 11 புவியியலாளர்கள் வாதிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.