Header Ads



பலமுறை கீழே விழுந்தும், முயற்சியை கைவிடாத இலங்கை மாணவி


ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார்.

16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார்.

அனுபவம் மற்றும் திறமைகளில் அதிகமுள்ள நாடுகளை சேர்ந்தவர்கள், இலங்கை பெண்ணை முந்திச் செல்லும் போதிலும் போட்டியை எப்படியாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாகியுள்ளது.

பல முறை கீழே விழுந்த போதிலும் அவர் முயற்சியை கைவிடவில்லை. போட்டியில் பதக்கத்தை இழந்த போதிலும் அவர் அந்த போட்டியை முழுமையாக நிறைவு செய்திருந்தார்.

அதற்கமைய ஆசிய குளிர்கால போட்டியில் கலந்து கொண்ட முதல் இலங்கையர் என அவரது பெயர் வரலாற்றில் பதிவாகியுள்ளது என பிரான்ஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட Azquiya,

போட்டி ஆரம்பித்த இடத்திற்கு சென்ற போது நான் மிகவும் அச்சதுடனே இருந்தேன். இதனாலேயே நான் கீழே விழுந்து விட்டேன். 4 முறை கீழே விழுந்து விட்டேன். எல்லையை தவறிய போதிலும் நான் இறுதி வரை சென்றேன். போட்டியை நிறைவு செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக காணப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கிரிக்கெட் மாத்திரமே பிரபலமாக உள்ளது. இவ்வாறான snowboarding போன்ற விளையாட்டுகளை இலங்கையில் நடத்த வேண்டும் என ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியாது தான். எனினும் உரிய நேரத்தில் பயிற்சி வழங்கப்பட்டால் இலங்கையர்களினால் எந்த ஒரு விடயத்தையும் செய்ய முடியும் என ஒலிம்பிக் குழுச் செயலாளர் மேக்ஸ்வெல் டி சில்வா பிரான்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.