Header Ads



பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பில், முஸ்லிம்கள் இல்லாமையால்..!


உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிப்பு முறை ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலைக்கு சிறு பான்மை கட்சிகள் முன் வந்துள்ளமையை உலமா கட்சி வரவேற்றுள்ளது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த அரசாங்க காலத்தின் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுள்ளா இருந்த போது முன்னாள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவினால் தயாரிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் முறை மாற்றத்தை அன்று முதல் இன்று வரை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தேர்தல் மாற்றம் என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தை மலினப்படுத்த எடுக்கும் முயற்சி என்றே உலமா அன்றும் கூறியது. ஆனாலும் அது பாராளுமன்றத்துக்கு வந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசாங்கத்தில் இருந்த சிறுபான்மை கட்சிகள் அதனை ஏற்று வாக்களித்தன.

அதன் பின் இது விடயத்தில் முரண்பட்ட மு. கா செயலாளர் ஹசனலி நாற்பதுக்கு அறுபது என இருக்க வேண்டும் என அறிக்கை விட்டார். இதனை உலமா கட்சி வன்மையாக மறுத்ததுடன் வட்டார, தொகுதி முறை தேவையில்லை என்றும் அப்படித்தான் தேவை என்றால் ஐம்பதுக்கு ஐம்பது என்ற ரீதியில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கூறியது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒரு விதமாகவும், மக்கள் முன் இன்னொரு விதமாகவும் நடித்ததால் பணமும் பதவியும் கொடுத்தால் வாய் அடங்கி விடுவர் என்பதை கடந்த அரசு தெளிவாக புரிந்திருந்ததால் மு. கா வின நாற்பதுக்கு அறுபது என்பதை அரசு ஏற்கவில்லை.

இத்தகையதொரு சூழ் நிலையில் நாட்டில் இனவாதம் இல்லாத, சமத்துவ நாட்டை உருவாக்கப்போகிறோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு ஒரு படி மேல் சென்று பெண்களுக்கு 25 வீதம் போன்ற சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தியது. அதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் துணை போனது. அத்துடன் கடந்த அரசால் தயாரிக்கப்பட்ட தேர்தல் முறையையே பாராளுமன்றத்தில் நிறை வேற்ற தற்போது துடிக்கிறது. இதனை மஹிந்த அரசில் எம்மால் எதுவும் முடியவில்லை, இந்த அரசில் சாதிப்போம் என கூறிய சிறுபான்மை கட்சிகள் இன்று எதுவும் சாதிக்க முடியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

உண்மையில் சிறு பான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தமது தொகுதிகளில் அவரை வெல்ல வைத்து அவரோடு நட்பு பாராட்டியிருந்தால் இவற்றை மிக இலகுவாக சாதித்திருக்க முடியும். ஏனைய ஆட்சியாளர்களை விட பல நன்மைகளை மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பிரிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர், மௌலவி ஆசிரிய நியமனம், முஸ்லிம் கலாச்சார திணைக்களத்துக்கு புதிய கட்டிடம், பலஸ்தீன சார்பு நிலைப்பாடு என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  

ஆகவே உள்ளுராட்சி தேர்தலை அரசு விகிதாசார முறையிலேயே உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் சிறு பான்மை கட்சிகள் உறுதியாக இருக்க வேண்டும். நக்குண்டார் நாவிழந்தார் என்றிராமல் சிறுபான்மை மக்களின் இந்த உரிமைக்காக போராட தமிழ் முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும். ஆக குறைந்தது ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஏற்கனவே உலமா கட்சியில் முன் வைக்கப்பட்ட யோசனையையாவது வென்றெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் முஸ்லிம் எவரும் இல்லாமை காரணமாக முஸ்லிம் மக்களின் இது சம்பந்தமான குரல் ஒலிக்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எதிர் தரப்பில் பல தமிழர்கள் இருப்பதால் அவர்களும் இந்த தேர்தல் முறை மாற்றத்துக்கெதிராக குரல் எழுப்ப வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

9 comments:

  1. Ulama katchi shee'aakkalaich,charndhadhu, awarhaludaiya ekkaruththayum naam eatruk kollath thewayillai.

    ReplyDelete
  2. ஆ..ஆ..ஆ.. காக்கா அறிக்கை விட்டார். அடுத்த அறிக்கை வரும் "உலமா கட்சியின் போராட்டத்தால் 50:50 முறை அமுல்படுத்தப்பட்டது என்று". அது சரி, அதென்ன "ஒரு படி மேலே போய் பெண்களுக்கு 25 வீதம் சட்டம் நிறைவேற்றி முஸ்லீம் சமூகத்தை அவமானப்படுத்தியது" என்ற கருத்துக்கு கொஞ்ஜம் இஸ்லாத்தில் ஆதாரத்துடன் விளக்கம் தேவைப்படுகிறது.

    சிலர் நக்குண்டு நாவிழந்தார். ஆனால் நீர் நக்குண்ணாமேலே நாவிழந்துள்ளீர். எங்களுக்கு புரிகிறது உங்களது நோக்கம். நாவிழந்தாவது நக்குன்பதக்கு தானே. தேவைதானா இப்படி ஒரு பொழப்பும் அரசியலும்.

    ReplyDelete
  3. ara ivan mahidava pathi pesuravan.....

    ReplyDelete
  4. அன்பார்ந்த வாசகர்களே யாரவது ஒருவர் எனக்கு சொல்ல முடியுமா இந்த உலமா கட்சி எங்கு எப்போது எந்த மாவட்டத்தில் அல்லது எந்த தொகுதியில் போட்டி இட்டது என்று அதே நேரம் எவ்வளவு வாக்குகளை இக்கட்சி பெற்றது என்று.

    மற்றும் இவரது மேல் உள்ள அறிக்கையை பார்க்கும் பொது முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எவ்வளோ செய்து உள்ளார் என்று எம்மக்களை திசை மாற்ற பார்கின்றார்.
    மௌலவி ஆசிரியர் நியமானம் எட்டு ஆண்டுகளாக யாருக்கும் கொடுக்க இல்லை., முஸ்லிம் கலாசார அமைச்சின் கட்டிடத்தை மகிந்த ராஜபக்ச தான் கட்டினார் என்று அவருடைய பெயரையும் அதில் சேர்க்க பார்கின்றார் இது மகிந்த ராஜபக்சக்கே சில நேரம் தெரியாமல் இருக்கலாம் உண்மையில் நான் அறிந்த வகையில் இதற்கு முன்னாள் அமைச்சர் மதிப்புக்கு உரிய அஸ்ரப் சேர் காலத்தில் இதற்கு அடித்தாளம் இட்டு அமைச்சர் றஊப் ஹகீம் 2004 ம் ஆண்டு இதற்கா பாடு பட்டர் இது Mr.Ranil . Mrs.Chandrikaa Madam காலத்தில் நடந்தது அதன் பிறகு ராஜபக்ச இதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லாமல் கிடப்பில் இருந்தது மேலும் இந்த இந்த காலத்தில் முஸ்லிம் கலாசார அமைச்சே இருக்க இல்லை.
    இப்படியாக ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதுவது என்றால் இந்த பதிலீடு மிகவும் நீண்டதாக இருக்கும் எனவே இந்த உலமா கட்சி எனும் இந்த Mr.Mubarak என்பவர் சும்மா மக்களை திசை திருப்ப பாடு படுகின்றார் என்றே எனக்கு தோன்று கின்றது.

    ReplyDelete
  5. இவன்கள்ர news எல்லாம் போடாதிங்கப்பா எரிச்சலா இருக்கு

    ReplyDelete

  6. நவீன ஊடகங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ள நிலையில் உலமா கட்சி எப்போது ஸ்தாபிக்கப்பட்டது? அது எந்த மாவட்டத்தில் தோதலில் குதித்தது? எத்தனை வாக்குகள் பெற்றது என இன்னமும் சில அறிவிலிகள் கேட்பது ஆச்சர்யமாக உள்ளது. இவர்கள் நாட்டில் வெளிவரும் எந்தப்பத்திரிகையையும் ஊடகங்களையும் படிக்காத அடப்பாவிகள் என தெரிகிறது.
    உலமா கட்சி 2005ம் ஆண்டு ஐந்து மௌலவிமாரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பெயர் உலமா என்றிருப்பதன் காரணமாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய முடியாது என சொல்லப்பட்ட போதிலும் உலமா கட்சி என்ற பெயரில் பதிவு செய்யப்படாத கட்சியாக இயங்குவதில் தப்பில்லை என தேர்தல் ஆணையாளர் அனுமதி பெற்று செயல்படுகிறது. ஒரு பதிவு செய்யப்படாத கட்சி நேரடியாக தனது பெயரில் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் இன்று வரை உலமா கட்சி நேரடியாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதனால் அதன் வாக்கு வங்கி எத்தனை என்பதை புரிந்து கொள்வது சிரமம்.
    ஆனாலும் உலமா கட்சி முஸ்லிம்களின் அரசியலில் தேசிய ரீதியில் பாரிய பங்களிப்பை செய்கிறது.

    கட்சிகள் என்றால் அது மக்கள் வாக்கு பெற்றதன் பின்னர்தான் கட்சியாக இயங்க வேண்டும் என சட்டமில்லை. 1981ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் 88ம் ஆண்டு அது பதியப்படும் வரை நேரடியாக தேர்தலில் குதிக்க முடியாத நிலையிலும் கட்சியாக செயற்பட்டது.

    தற்போதைய நல்லாட்சிக்கான முன்னணியும் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம் பண வசதிகள் உள்ளதால் அவர்கள் பற்றி யாரும் உங்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன என கேட்பதில்லை. ஆனால் ஏழை உலமாக்களால் அரசியலில் சாதிக்க முடியும் என்பதை பலராலும் ஜீரணிக்க முடியாமல் உலமா கட்;சியை நோக்கி கேள்விகள் கேட்கிறார்கள்.

    உலமா கட்சியின் இலக்கு என்பது உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியில் முஸ்லிம்களை ஒன்று படுத்துவதாகும். அத்துடன் உண்மை, நேர்மை, வாய்மை என்ற இஸ்லாமிய அரசியல் வழி காட்டலை முன்னெடுப்பதாகும். பதவி, பணத்துக்கு சோரம் போகாத பணித அரசியலை முன்னெடுப்பதாகும். இன்று வரை சமூகத்தை ஏமாற்றாமல் பலருக்கும் கசப்பாக இருந்தாலும் உண்மை அரசியலை செய்வதும், சொல்வதும் உலமா கட்சி மட்டுமேயாகும்.
    -மௌலவி முஸம்மில்
    கொள்கை பரப்பு செயலாளர்.

    ReplyDelete
  7. சில தெளிவுகள் உலமா கட்சி பற்றி எழுதியதட்கு நன்றிகள் என்றாலும் இங்கு சுட்டி காட்டப்பட்டுள்ள உண்மை , நேர்மை , வாய்மை எதை வைத்து காண்பது என்பது மிக கடினமான செயல் உண்மை என்று நீங்கள் சொல்லும் வார்த்தை மெய்யானால் உங்கள் தலைவர் சொல்வது போல் முன்னாள் ஜனாதிபதியா எல்லாம் முஸ்லிம்களுக்கு செய்தது மௌலவி ஆசிரியர் நியமனம் , மற்றும் மேல் சொன்னது போல் முஸ்லீம் கலாசார நிலைய கட்டிடம் போன்றவை இவர்தான் செய்தது என்று உங்களால் உறுதி பட கூற முடியுமா ? மற்றும் முஸ்லிம்களுக்கு இவரால் எந்த அநியாயமும் நடக்க இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? அழுத்தகம விவகாரம் தொடரபில் முன்னால ஜனாதிபதி சொன்ன கருத்து அந்த நேரம் அவர் நாட்டில் இருக்க இல்லை என்பது சரி அவர் வந்த பின்பாவது உரிய நடவடிக்கை எடுத்து இருக்க முடியும் அல்லவா ஏன் அப்படி செய்ய வில்லை மேலும் அவர் சொன்ன காரணம் அழுத்தகம தொடர்பில் ஒரு அமைச்சர் அவருக்கு உரிய நடவடிக்கை எடுக்க விடvillai என்று இப்படி ஒரு எல்லா அதிகாரமும் உள்ள ஒரு ஜனாதிpathi சொல்ல முடியுமா இப்படி சொல்லும் ஒருவரைத்தான் உங்கள் கட்சி நல்லது இவர் இருந்தால் எல்லாம் செய்து கொள்ளலாம் என்கிறீர்கள் அப்படித்தானே மௌலவி முஸம்மில் அவர்களே . என் என்போன்ற அரசியலில் எந்தவிதமான அறிவும் இல்லாத எனக்கே இவர்கள் பற்றி விளங்கும் பொது என் உங்கள் போன்ற எல்லாம் அறிந்தவர்களுக்கு இது விளங்குவது இல்லை .

    ReplyDelete
  8. சில படித்த உலமா என்று பெயர் சொல்லிக்கொள்ளும் நீங்கள் எங்களை பார்த்து அறிவிலிகள் என்று சொல்லும் போதே நாங்கள் ஆகிய நான் விளங்குவது என்னவென்றால் உங்கள் பேச்சில் (அறிவிலிகள்) பாமர மக்களை எவ்வாறு அழைப்பதில் உங்கள் அறிவு திறமையையும் உள்ளது என்பதையும் இஸ்லாத்தில் தெரியாத ஒன்றை விளங்கி கொள்வதட்காக கேட்கும் பொது அவரை பார்த்து அறிவிலிகள் என்று சொல்லும் உங்களை எப்படி இஸ்லாமிய உலமா என்று நாங்கள் அழைப்பது இதில் வேறு உண்மை நேர்மை வாய்மை ...... இவைகளுக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை .

    ReplyDelete
  9. சில படித்த உலமா என்று பெயர் சொல்லிக்கொள்ளும் நீங்கள் எங்களை பார்த்து அறிவிலிகள் என்று சொல்லும் போதே நாங்கள் ஆகிய நான் விளங்குவது என்னவென்றால் உங்கள் பேச்சில் (அறிவிலிகள்) பாமர மக்களை எவ்வாறு அழைப்பதில் உங்கள் அறிவு திறமையையும் உள்ளது என்பதையும் இஸ்லாத்தில் தெரியாத ஒன்றை விளங்கி கொள்வதட்காக கேட்கும் பொது அவரை பார்த்து அறிவிலிகள் என்று சொல்லும் உங்களை எப்படி இஸ்லாமிய உலமா என்று நாங்கள் அழைப்பது இதில் வேறு உண்மை நேர்மை வாய்மை ...... இவைகளுக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.