Header Ads



சவூதியில் ஹஜ் + உம்ராவை கையாள, இலங்கை தூதரகத்தில் தனி பிரிவு

இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­களை சீர­மைப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யாவில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்தில் ஹஜ் உம்ரா விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு பிரி­வினை நிறு­வு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு முன்­னெ­டுத்து வரு­கி­றது.

தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரும் சட்ட மூலத்தில் இவ்­வி­டயம் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ளது. வெளி­நா­டு­களில் இயங்கி வரும் எமது நாட்டு தூத­ரகங்­களில் தொழில் பிரிவு (LABOUR SECTION) என்று ஒன்று நிறு­வப்­பட்­டுள்­ளது போன்று சவூதி அரே­பி­யாவில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்தில் ஹஜ், உம்ரா விவ­கா­ரங்­க­ளுக்கு தனி­யான பிரிவு நிறு­வப்­ப­ட­வுள்­ளது.

இது விடயம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தாபல் சேவைகள் அமைச்சின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் கருத்து தெரி­விக்­கையில், “ஹஜ் உம்ரா ஏற்­பா­டு­களில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்­வு­களை பெற்றுக் கொள்­வ­தற்கும், சேவை­களை விரிவு படுத்­துவ­தற்­கு­மா­கவே இவ்­வா­றான தனி­யான பிரி­வொன்றை நிறுவ திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஹஜ் சட்டம் ஒன்றின் மூலம் இப்­பி­ரிவு நிறு­வப்­ப­ட­வுள்­ளதால் அதன் உத்­தி­யோ­கத்­தர்கள் சவூ­தியில் இருந்து கொண்டே இலங்­கையில் ஹஜ் குழு­வுடன் நேரடித் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பணி­களை துரி­தப்­ப­டுத்த முடியும்.

ஹஜ் சட்டம் மூலம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் பார­ாளு­மன்­றத்தில் அமைச்­ச­ரினால் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தாலும் ஹஜ் சட்ட வரை­பு­களைத் தயா­ரிப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் வேலைப்­பளு கார­ண­மாக சிறிது தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. சட்­ட­மூலம் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு அமைச்­ச­ரினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ளது. சட்­ட­மூ­லத்தில் மேலும் பல முன்­னேற்­ற­மான ஹஜ், உம்ரா தொடர்­பான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ளன.”

ஹஜ் கோட்டா
கடந்த வருடம் சவூதி ஹஜ் அமைச்­சினால் இலங்­கைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட 2800 கோட்­டாவில் 20% குறைத்தே வழங்­கப்­பட்­டது. உலக நாடுகள் அனைத்­தி­னதும் கோட்டா 20% குறைக்­கப்­பட்­டது. இவ்­வ­ருடம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள 2800 கோட்­டா­வையும் பெற்றுக் கொள்­வ­தற்கு சவூதி அரே­பி­யாவில் உள்ள இலங்­கையின் கௌன்­சிலர் ஜெனரல் பைசல் மக்கீன் கடந்த வாரம் ஹஜ் அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். எமக்கு 2800 கோட்டா இவ்­வ­ருடம் கிடைக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.2800 க்கும் மேல­தி­க­மான கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கோர­வுள்ளார். இதற்­காக சவூதி ஹஜ் அமைச்­சரை நேர­டி­யாக சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். சந்­திப்­புக்­கான அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பாடு

ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்­ட­மூ­ல­மொன்று தயா­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில் ஹஜ் ஏற்­பா­டுகள் கடந்த வருடம் போன்றே முன்­னெ­டுக்­கப்­படும். உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் (GUIDE LINES) படி ஹஜ் முக­வர்கள் தேர்வு, கோட்டா பகிர்வு முன்­னெ­டுக்­கப்­படும்.ஹஜ் சட்­ட­மூலம் விரைவு படுத்­தப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்டால் புதிய சட்­டத்தின் படியே ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றார். இதே­வேளை கடந்த வருடம் ஹஜ் முக­வர்கள் சிலரால் கோட்டா பகிர்வு முறைக்கு எதி­ராக உயர்­ நீதிமன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 26 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 ARA.Fareel

No comments

Powered by Blogger.