Header Ads



'கொழும்பில் முஸ்லீம் நாடென்றில், வாழ்கின்ற உணா்வு' - றிசாத் பதியுத்தீன்

(அஷ்ரப் ஏ சமத்)

வெள்ளவத்தையில் மெரைன் ரைவ் காலி வீதியில் கொழும்பு  வாழ் முஸ்லீம் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு போ்ச் 1 கோடி  சந்தைப் பெருமதி  விற்பனையி்ல் உள்ள  360 பேர்ச் விஸ்தீரணம் கொண்ட   (2 ஏக்கா் ) காணி துண்டொன்றை கொள்வனவு செய்து  இந்த வருடத்திற்குள் என்னால் முஸ்லீம் பெண்கள் கல்லுாாி ஒன்றுக்கு அன்பளிப்புச் செய்ய உள்ளேன். அதே போன்று  கொலன்நாவ,வெள்ளம்பிட்டி வாழ்  ஆயிரக்கணக்கான  முஸ்லீம் மாணவா்கள் அரச பாடசாலையில்லாது சர்வதேச பாடசாலைக்குச் செல்கின்றனா். அதற்கான முயற்சியில் மேல் மாகாண சபை உறுப்பிணா் முஹம்மத் பாயிசுடன் இணைந்து அங்கு ஒரு பாடசாலை அமைப்பதற்கு முழு முயற்சியில் இரங்கியுள்ளோம். என அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தாா். 

கொழும்பு -12 அல் ஹிக்மா கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு விழா மருதாணை டவா் மண்டபத்தில் கல்லுாாி அதிபா் கே.எம். எம். நாளீர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொன்டு உரையாற்றும்பேதே மேற்கண்டவாறு அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தாா். இங்கு உரையாற்றிய அமைச்சா் மேலும்   தெரிவித்தாவது- 

அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் சனத்தொகையில் சமமான சனத்தொகையில்  கொழும்பில் முஸ்லீம்கள்  வாழ்கின்றோம். ஆனால் அங்கு கல்வித்துறை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதயமான தலைநகரில் வாழும் முஸ்லீம்கள் கல்வி மட்டுமல்ல  பொருளாதார குடியிருப்பு வாழ்க்கைத்தரம் அடிப்படைவசதிகள்  அற்று  பின் தங்கியதொரு சமுகமாக வாழ்கின்றோம். எதிா்காலத்தில் நமக்கென இருப்பது கல்வி மட்டும் தான். ஆகவே கொழும்பு வாழ் பெற்றோா்கள் தமது செல்வங்களை கல்வியில் முன்னேற்றி இந்த தலைநகரின் சிறந்த கல்வியலாளா்களாக வருவதற்கு அர்ப்பணித்தல் வேண்டும்.  

கொழும்பில் உள்ள 16 முஸ்லீம்  பாடசாலைகளில்  அல் ஹிக்மாவில் 1500க்கும் மேற்பட்ட மாணவா்கள்  கல்வி கற்கின்றனா். இக் கல்லுாாியின் அதிபா் ஆசிரியா் குழாம், பாடசாலை பழைய மாணவா்கள் இனைந்து 3 மாடிக் கட்டிமொன்றை தணிப்பட்ட முறையில் இணைந்து நிர்மாணித்துள்ளனா். இப் பாடசாலையின் கல்வி அபிவிருத்தியின் சகலரும் ஒன்றினைந்து  ஒற்றுமையாக செயலாற்றுகின்றனா்.  அத்துடன் இக்கல்லுாாியில் 9 ஏ மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கூடுதலாக சித்தி , இம்முறை 4 மாணவா்கள் பல்கலைக்கழக பிரவேசம் போன்ற முன்னேற்றங்களை காண்கின்றபோது  மிகவும்  சந்தோசமாக இருக்கின்றது.  

இந்த நாட்டில் நாம் 10 வீதமாக வாழ்கின்றோம்.. தலைநகரில் பள்ளிவாசல்கள் நிறைய உள்ளன. வெளிநாட்டில் உள்ள முஸ்லீம்கள் இங்கு வருகை தந்தால் முஸ்லீம் நாடென்றில் வாழ்கின்ற ஒரு உணா்வு கொழும்பில் உள்ளதாகச் சொல்வாா்கள்.  உலகில் உள்ள 57 நாடுகளில் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் சீர்குழைந்துள்ளது. அந்நாடுகளில் நாளாந்தம் குண்டு சத்தமும், செவடிகள், உயிர்சேதம், யுத்த அழிவுகளேயே நடைபெற்ற வருகின்றன. இதனை சில சதிநாசக்காரகள்  திட்டமிட்டு அரபு நாடுகளையும் அழிக்கின்றனா். இந் நாடுகளில்  எவ்வளவுதான் எண்னை வளம். தங்கம் வளம் இருந்தாலும் அந்த மக்கள்  அமைதியானதொரு வாழ்க்கையைத்  தேடி அலைகின்றனா்.  அதுமட்டுமல்ல சிறுபாண்மையாக  முஸ்லீம்கள் வாழும்  நுாற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலும் சில விசமிகள் அந்த மக்களையும் சீர்குலைக்க  ஊடுவி வருகின்றனா். நாடற்றவா்களாக இருந்த இஸ்ரேவலா்கள் பலஸ்தீனத்திற்குள் ஊடுவி அந்த நாட்டினை சின்னா பின்னமாக்கி நாட்டை பிடித்து வருகின்றனா்.  

இந்த நாட்டில் உள்ள 900 பாடசாலைகளது தரவுகள் முன்னேற்றங்கள பொளதீக வளங்கள்  மற்றும் செய்ய வேண்டிய அபிவிருத்திகள் பற்றி  தரவுகள் எமது கட்சியின் கல்விக்குழு தரவுகளை சோ்த்துள்ளனா். அடுத்த ஒரு இரு மாத்திற்குள் சகல அதிபா்களையும் கொழும்புக்கு அழைத்து அந்த தரவுகள் கொண்ட  எமது பாடசாலை அபிவிருத்திற்குத்  தேவையான நிதியினை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி அழைத்து கலந்தாலோசிக்க எதிா்பாத்துள்ளேன்.  என அமைச்சா் றிசாத் பதியுத்தீன் உரையாற்றினாா்.

1 comment:

  1. Every Muslims ministers in parliament should do something useful to our Muslims ummah in sri lanka Like Minister Rishard doing, so we appreciated Mr.Rishard & his works like wish other Ministers also who is doing hood works to our Ummah

    ReplyDelete

Powered by Blogger.