Header Ads



4 காரணங்களுக்காக, கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க, அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது

நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவு, பலவந்தப் பாலுறவு, சிறுவயதுக் கர்ப்பம், கருவில் கடுமையான குறைபாடு ஆகிய நிலைமைகளில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க, அமைச்சரவையில் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பான குழுவும் சாவித்திரி குணசேகர தலைமையிலான இன்னொரு குழுவும், கருக்கலைப்பை குற்றவியல் குற்றமாக்கும்படி செய்த பரிந்துரைகளுக்கு அமைய, நீதியமைச்சு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.  

இந்தக் குழு, 1995ஆம் ஆண்டில் ஒரு சட்டநகலைக் கொண்டுவந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பைக் குற்றவியல் குற்றமற்றதாக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியை எடுத்துக் காட்டியது. ஆயினும், இந்தச் சட்டமூலம், எதிர்ப்புகள் காரணமாகக் கைவிடப்பட்டது. 

தற்போது, மனநோய் மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றுக்கு ஆளான பெண்களைத் தவிர ஏனையோர் கருக்கலைப்புச் செய்வது சட்ட விரோதமாகவே உள்ளது.   தாய் மரணங்களில் தொற்றுக்கு வழிசெய்த கருக்கலைப்பு, பிரதான காரணமாகவுள்ளது என, அமைச்சரவை அறிக்கை கூறுகிறது. 

90 சதவீதமான கருக்கலைப்பு திருமணமான பெண்களிலும் 8.9 சதவீதமான பெண்களிலும் மேற்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.  

1 comment:

Powered by Blogger.