Header Ads



டில்ஷானை காப்பாற்ற, சாகலவே Call எடுத்தார் - மைத்திரியிடம் கூறிய பூஜித்த

அமைச்சர் சாகல ரத்நாயக்கவே “நிலமே” ஒருவரை கைது செய்வது சம்பந்தமாக அண்மையில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திர ஜனாதிபதி முன்னிலையில் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதான அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திர பகிரங்க மேடையில் இருக்கும் போது நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தவறானது எனவும் அது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் விபரங்களை கேட்க உள்ளதாக ஜனாதிபதி கடந்த வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, டில்ஷான் விக்ரமரத்ன குணசேகர என்பவரை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்ட சேர் யார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு இருப்பதாக கூறியிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் அமைச்சரை சேர் என்று அழைத்திருக்க வேண்டும் அல்லது பிரதமரை சேர் என்று அழைத்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.