Header Ads



கியூபாவில் எந்தவொன்றுக்கும் பிடல் காஸ்ட்ரோ பெயர் சூட்ட தடை

மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.

அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு அவரது பெயர் சூட்டும் முயற்சியில் மக்கள் ஈடுபடக்கூடும் என்பதால் அதற்கு இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தடை விதித்து உள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, ‘‘எனது சகோதரர், தான் இறந்த பிறகு தனது பெயர் எந்தவொரு நிறுவனத்துக்கும், தெருவுக்கும், பூங்காவுக்கும் அல்லது இன்னபிற இடங்களுக்கும் சூட்டப்படுவதை விரும்பவில்லை. எனவே அவருடைய பெயரை சூட்டுவதற்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்’’ என்று குறிப்பிட்டார்.

இதேபோல், மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கப்படுவதையும் தனது வாழ்நாளின்போது பிடல் காஸ்ட்ரோ விரும்பியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின்போது இந்த உத்தரவுக்கு அனுமதி அளிக்கும் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

கடந்த மாதம் 25–ந் தேதி மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோ, தன் வாழ்நாளில் எந்தவொரு அமைப்புக்கும் தன் பெயர் சூட்டப்படாமல் பார்த்துக்கொண்டதும், தனிமனித துதி பாடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.


3 comments:

  1. ஹ்ம்ம் ஆனால் இது இலங்கையில் சாத்தியப்படாது. மரணிக்கும் முன்பே பணதால்களிலும் , பாதை எங்கும், விளையாட்டு அரங்கம், விமான நிலையம் ஐயோ என்னால் முடியாது பார்க்கும் இடம் எல்லாம் அந்தந்த நாட்களில் ஆட்சி செய்தவர்களின் பெயர் இல்லாத இடமே இல்லை என்னவோ இவர்களின் குடும்ப சொத்தில் இருந்து கட்டிய மாதிரி அவர்களின் பெயர் பதியப்படாத இடமே இல்லை. மக்களின் வரிப்பணத்தில் அவர்களின் பெயர். நாட்டு வழக்கில் சொல்வதானால் " ஊரான் வீட்டு கோழிய அறுத்து உம்மாட பெயரில் தானம் கொடுத்த மாதிரிதான் இவர்களின் செயல். இந்த பிடல் காஸ்ட்ரோ வை பார்த்தாவது இவர்கள் திருந்துவார்களா ???????????????????????????????????

    ReplyDelete
  2. இப்படி ஒருசிலர்,
    பலரோ இருக்கும்போதே மண்டபமும் சிலையும் தம்பெயெரில் வைத்து தம்பட்டமடிப்பர்.

    ReplyDelete
  3. காஸ்ட்ரோ என்ற கம்யூனிச சர்வாதிகாரியின் கொள்கைகளை அவரது வாயினாலே அணைத்து விட்டிருக்கிறார்.

    இப்படித்தான், தான்தோன்றித்தனமான கொள்கைகள் எல்லாம் கால வெள்ளோட்டத்தில் அழிந்து போகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.