Header Ads



ஞானசாரா - மைத்திரி சந்திப்பு, மிகத் தவறானது என்கிறார் சிராஸ்


ரவுடியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஞானசாராவை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, அவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு மேற்கொண்டமை மிகப்பெரும் தவறாகும் என மூத்த முஸ்லிம் சட்டத்தரணியான சிராஸ் நூர்த்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்,

பல நீதிமன்ஙகளில் ஞானசாரா குறித்த வழக்குகள் நடைபெறுகிறது. அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பிடிவிறாந்துகூட பிறப்பிக்கப்பட்டவர், சிறையில் அடைக்கப்பட்டவர், இஸ்லாத்தை அவமதித்தவர், அல்குர்ஆனை தூற்றியவர்.

இனவாதத்திற்கு தூபமிட்டவர், கலவரத்திற்கு வித்திட்டவர், பள்ளிவாசல்கள் தாக்கப்பட காரணமானவர், கிறிஸ்த்தவ தேவாலயங்களில் தாக்குதலின் காரணகர்த்தா.

இப்படியெல்லாம் அவர் மீது தெளிவான குற்றச்சாட்டுக்கள் இருக்கையில் நாட்டின் ஜனாதிபதி இப்படிப்பட்ட ஒரு ரவுடி பௌத்த மதகுருவை எப்படி ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடலாம்..?

ஞானசாரா போன்ற ஒரு அடாவடி பௌத்த குருவுடன் கிறிஸ்த்தவ மதகுருக்களும், முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்றாக அமர்ந்திருந்தமையும் வெட்கப்படக்கூடியது.

நாட்டின் ஜனாதிபதி ஒருவரே இப்படி அடாவடி பௌத்த தேரரை சந்திக்க முடியமாயின் அவர் மீது எதிர்காலத்தில் நாம் தொடர்ந்துள்ள வழக்குகளுக்கு என்னாவாகும் எனவும் சிந்திக்கத் தேன்றுகிறது. முஸ்லிம் இளைஞர்கள் சட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திலையில் ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடானது முஸ்லிம் இளைஞர்களின் நம்பிக்கையில் பங்கத்தை ஏற்படுத்துமெனவும் சிராஸ் நூர்த்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07) சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால தலைமையில் நடைபெற்றது. இதில் நீதியமைச்சர் மற்றும் பௌத்த, கிறிஸ்த்தவ், இந்து, இஸ்லாமிய மதகுருக்களுடன் பொதுபல சேனாவின் ஞானசாராவும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


10 comments:

  1. I suspected few of the previous gvt.But now I have started to suspect this gvt too. White is white black is black.

    ReplyDelete
  2. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. முஸ்லிம்களின் அரசியல் பலம் சமய மற்றும் சிவில்சமூக அமைப்புக்களிடையே நிலவும் இடைவெளி என்பனபற்றி ஜனாதிபதி நன்றாக விளங்கிவைத்துள்ளதன் பெறுபேறுதான் ஞானம்சாரா தேர்ருக்கான அழைப்பும்.
    ஆனாலும் முஸ்லிம்களின் ஆத்மீக பலம்பற்றியும் குனூத் பற்றியும் முன்னாள் தலைவரிடம் பாடம்படிக்கவேண்டியுள்ளது.

    ReplyDelete
  4. நாட்டில் உள்ள குற்றவாழிகளையெல்லா ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் இந்த ஜனாதிபதி .முஸ்லீம்களுக்கு இவ்வளவு துரோகம் செய்தும் .யுத்தம் முடிந்த பின் நாட்டின் அமைதியை குழப்பியுள்ள ஒரு றவுடிப் பயங்கரவாதியை தனது மாளிகைக்கு அழைத்து பேசுவது இந்த நாட்டு முஸ்லீம்களை தூசிக்குகூட மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்,நாட்டில் நடக்கும் இனவாதம் அனைத்தும் அரசாகத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடக்கிறது என்ற சந்தேகம் எழுகின்றது,

    ReplyDelete
  5. IT IS NOT A ISSUE.ANY THING HAPPEND PRESIDENT SHOULD TALK TO THE PERSON AND DISCUSS.IT WILL BE BENEFIT FOR OUR COUNTRY FUTURE

    ReplyDelete
  6. Why not talk that our Muslim Honorable Ministers? because they need only ministry and some other benefits. dear politician please we need a community like TNA. if we are miss this chance than never we can not get that our rights. so please forget all of your ego, jealous and meet our president and prime minister tell them strongly.

    ReplyDelete
  7. This is very simple..as he discussed with all rowdies...
    Even muslim name holders they are not a pure muslim....

    ReplyDelete
  8. This is a clear indication hat SL Muslim community have big leadership gap and this to be filled at earliest.

    Also this time for the Alibabas to go home from East and West.

    ReplyDelete
  9. இதுவேல்லாம் உலமாக்களின் ராஜதந்திரம் குர் ஆனைப்பற்றி ரோட்டில் கதைக்கவேனாம்
    தங்களிடம் கேட்குமாறுகூறினர் இதில் இருந்து என்ன விளங்குகின்றது.

    குர்ஆன் விளக்கம் பற்றி தௌகித்ஐமாத்தான் ரோட்டில் இருந்து விளக்கம் கொடுப்பது. இந்த தௌகித்ஐமாத்தை எப்படி அடைக்கலம் என்பதுதான் திட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.