Header Ads



மையவாடி காணி அபகரிப்பு - கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

-ARA.Fareel-

மாளி­கா­வத்தை மைய­வாடிக்  காணியை தனியார் நிறு­வ­ன­மொன்று ஆக்­கி­ர­மிப்பு செய்து கட்­ட­ட­மொன்று  நிர்­மா­ணித்து வரு­வது தொடர்­பாக கொழும்பு மாந­க­ர­சபை ஆணை­யா­ள­ருக்கு எதி­ராக எதிர்­வரும் 16 ஆம் திகதி மாந­க­ர­சபை கட்­ட­டத்­துக்கு முன்னால் டவுண் ஹோலில் ஆர்ப்­பாட்­ட­மொன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

16 ஆம் திகதி ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து நடை­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தை இலங்கை  முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் மற்றும் மாளி­கா­வத்தை மஸ்ஜித் சம்­மே­ளனம் என்­பன ஏற்­பாடு செய்­துள்­ளன.

கொழும்பைச் சேர்ந்த ஏனைய பள்­ளி­வா­சல்­களின் ஜமாஅத்­த­ார்­களும் இவ்  ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொள்­ள­வுள்­ளனர். 

மாளி­கா­வத்தை  மைய­வாடி காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தற்கு எதி­ராக 2016 ஏப்ரல் மாதம் அப்­போ­தைய மேயர் முஸம்­மினால் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் இடம் பெற்­றன.

வழக்கு தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி  குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில் (24.08.2016) மாந­கர சபையின் ஆணை­யாளர் வழக்­கினை வாபஸ் பெற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

இதற்கு எதிர்ப்புத்  தெரி­வித்து ஆர்ப்­பாட்டம் இடம் பெற­வுள்­ள­துடன், தற்­போது மைய­வாடிக் காணிக்­க­ருகில் உள்ள மின்­மாற்­றி­யொன்­றினை இலங்கை மின்­சா­ர­சபை அகற்றி மைய­வாடி காணிக்குள் நிர்­மா­ணிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்தும் மாநகரபை ஆணையாளர் வி.கே.ஏ.அநுரவுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Lets take measures to prosecute against this draconian municipal council commissioner. He doesn't deserve to hold this position anymore.

    ReplyDelete

Powered by Blogger.