Header Ads



கல்வியின் மூலம் மாற்றம் - 13000 மாணவர்களுக்கு உதவிய 'ஸம் ஸம்'


ஸம் ஸம் நிறுவனத்தின் school with a smile செயல் திட்டத்தின் கீழ் 2017 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. மூவினத்தையும் சேர்ந்த 13000 மாணவச் செல்வங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இப் பொதியில் தரம் வாய்ந்த ஒரு புத்தகப் பை, சப்பாத்துக்கான 1000 ரூபா பெறுமதியான வவுச்சர், கொப்பிகள், காகிதாதிகள் என்பன உள்ளடங்குகின்றன.

இத்திட்டத்திற்கான சுமார் 40 மில்லியன் ரூபாவினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இலங்கை சகோதரர்கள் மாத்திரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்டாரகொஸ்வத்தை,கலேவெல,மாத்தளை, தெல்தோட்டை, உடுநுவரை, வடதெனிய, மஸ்கெலிய, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை, லுனுகலை, மொனராகலை, பண்டாரவலை, தெஹிவலை, வெலிகமை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இச் செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

பாடசாலை இடைவிலகலைக் குறைத்தல்,பெற்றோரின் கல்விக்கான செலவுக்குக் கைகொடுத்தல் மற்றும் சகவாழ்விற்குப் பங்களித்தல் ஆகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு கல்வியின் மூலம் மாற்றத்தை உருவாக்க இத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்திற்கு உடலால்,பொருளால்,பணத்தால் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸம் ஸம் பவுண்டேஷன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


3 comments:

  1. Our donors should come forward to help the poor in education. Organization like Zam Zam has been doing its best. Help our society in education rather than building mosques unneccessarily.

    ReplyDelete
  2. Masha Allah,may almighty Allah bless yusuf mufthi and zam zam members

    ReplyDelete
  3. Zam Zam இயக்கம் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாத ஏழை சிறார்களுக்கும் உதவுகின்றனர். வரவேற்கத்தக்கது . ஆனால் ஏன் இவ்வாறான ஒரு பிரத்தியேகமாகன இயக்கம் முஸ்லிம் அல்லாத ஏழைகளையும் தேவைப்படுகிறது ? ஏன் இஸ்லாம் ஏற்கனவே இதை வழிகாட்டவில்லையா? நிச்சயமாக வழிகாட்டியுள்ளது. அதுதான் zakath. ஸகாத்தை பெற தகுதியான ஒரு கூட்டமே முஅல்லபத்துல் குழூப்( muallafathul qulub ) litterally its called people whose hearts are softened ... அதாவது poor non - Muslims who are not enmity with Muslims, முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டாத முஸ்லிம் அல்லாத ஏழைகள் .ஆனால எமது ஆலிம்களும் முப்திமார்களும் இந்த குழுவின் வரைவிலக்கணத்தை திரிபு படுத்தி வெறும் மவ்லா இஸ்லாம் , நவ முஸ்லிம்கள் அல்லது புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று மாட்டிவிட்டார்கள். இதன் கருத்தை சரியாக விளங்கி அதை அமுல்படுத்தினால் ஏராளமான முஸ்லிம் அல்லாத ஏழைகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள்.இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு இருப்பார்கள் . இஸ்லாம் பற்றிய தவறான பிரச்சாரங்களையும் நம்பியிருக்கமாட்டார்கள். ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் எத்தனையோ அந்நியர் கிராமங்களால் சூழப்பட்டே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் . அன்றாட வாழ்கையை நடத்திச்செல்ல ஏதோ பல உதவிகளை நாடி நிறப்பவர்களே. இவ்வாறான நடுநிலையான முஸ்லிம் அல்லாத ஏழைகள் ஆண்டுதோறும் இஸ்லாம் கூறும் அடிப்படையில் உதவப்பட்டிருந்தால் இன்று நிலமை வேறுவிதமாக இருக்கும் . எம்முடன் எந்த காரணமும் இல்லாமல் பகைமை பாராட்டுபவர்கள் ஒட்டி உறவாடி இருப்பார்கள் . இது நாமும் நம்மை வழிநடத்தும் உலமாக்களும் விட்ட மாபெரும் தவறாகவும் குற்றமாகவுமே நான் கருதுகிறேன் . ஸகாத்தை சரியாக நிறைவேற்றினால் zam zam போன்ற இயக்கங்கள் தேவையே இல்லை . இதை உலமாக்கள சிந்திக்க வேண்டும் . முஸ்லிம் சமுகத்தை இத்தருணத்திலாவது சரியாக வழிநடத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.