Header Ads



முஸ்லிம்களின் விவகாரம், ரணிலின் கவனத்திற்குச் செல்கிறது

சம­கா­லத்தில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணவும் பொலி­ஸாரின் சட்­ட ­ந­ட­வ­டிக்கை தாம­த­ம­டை­வது குறித்தும் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் எம்.பி.க்கள் அனை­வரும் கட்­சியின் செய­லாளர் கபீர் ஹாஸிமின் தலை­மையில் இன்று அல்­லது நாளை பாரா­ளு­மன்­றக் ­கட்­டடத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யாட தீர்­மா­னித்­துள்­ளனர். 

நேற்­றைய தினம் ஆளும் கட்­சியின் குழுக் கூட்டம் இடம்­பெற்­றது.

இதன்­போது நாட்டில் தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத சக்­தி­களின் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளமை மற்றும் அதற்கு எதி­ரான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை குறித்து ஐ.தே.க.வின் செய­லாளர் கபீர் ஹாஸி­மிடம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் முறை­யிட்­ட­தை­ய­டுத்தே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

கேகாலை மாவட்ட ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கட்­சியின் செய­லா­ள­ரு­மான கபீர் ஹாஸிம், கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம், கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.மரிக்கார், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் ஒன்­று­கூடி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். 

குறிப்­பாக தனியார் சட்டத் திருத்தம் குறித்த தெளிவற்ற தன்மை, கடும் போக்கு சக்­தி­களின் மீள் எழுச்­சியும் அவர்­களின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பிரச்­சாரமும், குரு­நாகல் மாவட்­டத்தில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள், தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் மற்றும் இறக்­காமம் பிர­தே­சத்தில் சிலை வைக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. 

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை இன்று அல்­லது நாளைய தினம் ஐ.தே.க. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்­தித்து முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் குறித்து அவருக்கு தெ ளிவுபடுத்துவதுடன், இதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் சுட்டிக்காட்டவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

விடிவெள்ளி  SNM.Suhail

3 comments:

  1. MP pazaviyai pazuhakka(dhaya gamageya oruvakkiyazu nari than)

    ReplyDelete
  2. என்னா இலங்கை பிரதமர் பேபர் கீபர் பார்க்கிறது இல்லையோ ? ஜனாதிபதி என்றால் நிறைய பேபர் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வார் யாரும் போய் அவரிடம் சொல்ல தேவை இல்லை பின் நடவடிக்கையும் எடுப்பார் ஹிஹிஹிஹி

    ReplyDelete
  3. மிக அவசரமாக ரணிலின் கவனத்துக்கு கொண்டுசென்றவரை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.