Header Ads



"வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளின் உண்மையான, நியாயபூர்வமான உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது"

வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளின் உண்மையான – நியாயபூர்வமான உரிமை இராணுவத்தினருக்கே  உள்ளது என  மஹிந்த அணி நாளுமன்ற உறுப்பினரான வீரகுமார திஸாநாயக்க நேற்றுச் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி சுவீகரித்தல் சட்டத்தின் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்கு விதிகளின் திருத்தம் தொடர்பான பிரேரணை மீதான விவகாரத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

வடக்கு, கிழக்கில் காணிச் சட்டம் என்ற ஒன்று இருக்கவில்லை எனவும்  உரிமையாளர்களும் இருக்கவில்லை எனவும் அங்கு பிரபாகரனின் சட்டம் மட்டுமே இருந்தது எனவும் பிரபாகரன் கையகப்படுத்தியிருந்த அந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர்தான் அவர்களிடம் மீளக் கையளித்தனர் எனவும் தெரிவித்துள்ளார். 

பிரபாகரனை விரட்டி அவரிடமிருந்து காணிகளை பெற்று அந்த மக்களிடம் மீளக் கையளிக்க இராணுவத்தினர் முன்னோக்கி சென்ற சந்தர்ப்பத்தில்தான் இடத்துக்கு இடம் முகாம்கள் அமைக்கப்பட்டன எனவும் இவ்வாறான நிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளின் உண்மையான நியாயபூர்வமான உரிமை இராணுவத்தினருக்கே உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும்  இராணுவ முகாம்கள் வடக்கு கிழக்கில் மட்டும் இல்லை. இங்கும் இருக்கின்றது எனவும்  தனது மாவட்டமான அநுராதபுரத்திலும் இருக்கின்றது எனவும்  தெரிவித்த இவர்  ஆனால், வடக்கு, கிழக்கில் மட்டுமே இராணுவ முகாம்கள் இருப்பதைப்போல கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவம் பற்றிய  பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இராணுவ முகாம்கள் இருப்பது பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.