Header Ads



மத்தளைக்கு வந்த விமானத்தில், பறவை மோதி எஞ்சின் செயலிழந்தது - அனர்த்தம் தவிர்க்கப்பட்டது


அம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவை ஒன்றினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விமானியின் சமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தில் நேற்று பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்த விமானமொன்றின் முன்பக்க என்ஜினில் பறவையொன்று மோதுண்டுள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு நடு வானில் பறவை மோதியதனால் விமானத்தின் இயந்திரமொன்று (என்ஜின்) செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இயந்திரம் செயலிழந்த போதிலும் மற்றைய என்ஜினின் ஊடாக விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த ப்ளை டுபாய் (FLY DUBAI) விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கியது.

இசட்551 ரக விமானத்தில் பறவை மோதுண்டதாகவும் விமானத்தில் 43 பயணிகளும் 7 சிப்பந்திகளும் பயணித்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ஜின் செயலிழந்த காரணத்தினால் பயணிகள் சில மணித்தியாலங்கள் காத்திருந்து வேறு விமானத்தில் டுபாய் நோக்கிப் பயணித்துள்ளனர்.

1 comment:

  1. Etan pinnar mattala air portla flights warum pohum nerangalil mahinda rajapaksa kudumbaththil ellorukkim owworu GUN koduththu parawaihalai wirattuwatatku niruththawum. Ellawittal flight la warum makkalukku yaar poruppu.

    ReplyDelete

Powered by Blogger.