Header Ads



உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள், கொழும்பு பல்கலைக்கழகம்

உலகின் சிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட Global Universities index பட்டியலுக்கமைய கொழும்பு பல்கலைக்கழகம் இவ்வாறு 1000 பல்கலைக்கழகங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

இம்முறை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு உலகின் 801ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்த நாட்டின் வேறு எந்த ஒரு பல்கலைக்கழகமும் இந்த 1000 பல்கலைக்கழக பட்டியலுக்குள் இடம்பிடிக்கவில்லை.

தற்போது உலகின் மிக சிறந்த பல்கலைக்கழகமாக பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் stanford பல்கலைக்கழம் மூன்றாம் இடத்தையும், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.