Header Ads



மங்களவை அச்சுறுத்திய றிசாத்


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்றுத்திய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பான் கீ மூனை சந்தித்து, முஸ்லிம்கள் தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பிலேயே அமைச்சர் றிசாத்திடமிருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூனை சந்தித்து முஸ்லிம்கள் தொடர்பில் உரையாட அனுமதியளிக்குமாறு றிசாத் வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். எனினும் வெளிவிவகார அமைச்சிடமிருந்து இதுதொடர்பில் பதில் அனுப்ப கால தாமதம் ஆகியுள்ளது. அத்துடன் பான் கீனை சந்திப்பதில் நிச்சயமற்ற தன்மையும் நீடித்துள்ளது.

இவ்வேளை அமைச்சர் மங்களவுடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திள்ள றிசாத், பான் கீ முனை சந்தித்து முஸ்லிம் விவகாரம் குறித்து உரையாட அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார். எனினும் மங்களவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காதிருந்துள்ளதுடன், நேரமின்மையும் காரணம் காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள றிசாத், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூனை சந்திக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தரப்பு சார்பில் தம்மால் சந்திக்க முடியாதென கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் பான் கீ மூனை சந்திக்க அனுமதியளிக்காவிட்டால், முஸ்லிம் விவகாரங்களை ஜெனீவாவுக்கு கொண்டு சென்று முறையிடுவோம் எனவும், மஹிந்த காலத்தில் போன்று எங்களை அச்சுறுத்த முடியாதெனவும், நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவியவர்கள் முஸ்லிம்களே என்பதை மறந்துவிட வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளார்.

றிசாத் அச்சுறுத்துவதை கேட்ட மங்களசமரவீர, தான் மீண்டும் றிசாத்தை அழைப்பதாக கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

சில மணித்தியாலங்களின் பின்னர் றிசாத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ள மங்கள சமரவீர பான் கீ முனை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்று -02- பான் கீ மூனை சந்தித்த றிசாத் முஸ்லிம்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அவரிடம் கையளித்துள்ளார்.

7 comments:

  1. Commendable work by Minister Rishad Bathiudeen!!! Well done

    ReplyDelete
  2. பிலிம் காட்டுவது என்பது இது தான். மங்களவை அச்சுறுத்திய செய்தி தான் முஸ்லிம்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் முக்கியமே தவிர, பான் கீ மூனிடன் கையளிக்கப்பட்ட உள்ளடக்கம் அவர்களுக்கு தேவையில்லை...!!!!! ஊடகத்துறையினர் சிந்திப்பார்களா?????????????

    ReplyDelete
  3. இங்க பாருடா, இவரும் ஜெனிவாவுக்கு போகப்போகிறாராம்.
    மினிஸ்டர் நல்லா பகிடி விடுவார் போல.
    பின்னர் மினிஸ்டர் பதவி????

    ReplyDelete
  4. அமைச்சர் றிசாத் அவர்களே உங்களுக்கு அல்லாஹ் றஹ்மத் செய்வானாக,பாதுகாப்பும் தந்தருள்வானாக இதுபோன்று அனைத்து விடயங்களிலும் தைரியத்துடன் செயல்பட அல்லாஹ்விடம் உதவி வேண்டுகிறோம் ஆமீன்

    ReplyDelete
  5. It is the pity that Muslim politicians know nothing about the World and UNO politics.To complain to UNO make no purpose.It aggravate problem we have already and annoy the majority Sinhalese who are not against Muslims.Also give clues to BBS to attack more and will help their campaign.
    UNO is very angry with Muslims and Muslim countries because they defeated their resolution against Srilanka.

    ReplyDelete
  6. அட யாரப்பா திரும்பமும் காதூல பூ,சுத்துவது,

    ReplyDelete
  7. I am not a supporter of Min Rishard but I admire his brave actions at times. If he could do something for Muslim community, it should be appreciated.

    ReplyDelete

Powered by Blogger.