Header Ads



பட்டன் போன்ற பேட்டரிகள், விஷத்தைவிட மோசமானவை

அவை உருவில் சிறிதாக இருக்கலாம். ஆனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக குழந்தைகளின் உயிருக்கு.

கைகடிகாரங்கள், பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றில் இருக்கும் சிறிய வட்டவடிவ பட்டன் பேட்டிரிகள் குறித்து பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ள எச்சரிக்கை இது.

இந்த பேட்டரிகளை குழந்தைகள் விழுங்கிவிடும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துவருவதாக பிரிட்டன் மருத்துவமனைகள் கவலை வெளியிட்டுள்ளன.

அதனால் ஏற்படக்கூடிய கொடும் பாதிப்புகள் குழந்தைகளின் உணவுக்குழாய் மற்றும் சுவாசக்குழாயை மோசமாக பாதிக்கும் என்றும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளைப்பொறுத்தவரை பட்டன் பேட்டரிகள் விஷத்துக்கு ஒப்பானதாகவே பெற்றோர் கருதவேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள் குழந்தைகளின் கைகளுக்கு இவை கிடைக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர். BBC

No comments

Powered by Blogger.