Header Ads



மலேசியாவில் புலி ஆதரவாளர்கள் அட்டகாசம் - உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது தாக்குதல்


மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் இரண்டாவதுசெயலாளர் ஆகியோர் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்றுஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

மகிந்தவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தினேஷ் குணவர்தன நாடு திரும்பஇருந்தமையால் அவரை வழியனுப்ப வந்த போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மகிந்தவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்த தமிழீழவிடுதலை புலிகளின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமுற்ற மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது இரண்டாவதுசெயலாளர் ஆகியோர் தற்போது கோலாலம்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆர்பாட்டக்காரர்கள் மகிந்த எங்கே என தூதரிடம் கேட்டுள்ளதாகவும், இதற்குபதிலளித்த தூதுவர் பொலிஸாரிடம் தொடர்பு கொள்ளவும் என கூறியுள்ளார்.

இதன்பின்னரே தூதுவரை ஆர்பாட்டக்காரர்கள் தாக்கினார்கள் என்றும்அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தார்கள் என்றும் முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் அவருடன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தபிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உபாலி கொடிகாரமற்றும் மகிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார ஆகியோர் நாளைநாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. This is very big crime. The Tamil Diaspora is trying to bring mahinda to power again.Till now why did not take any action by Malaysia?

    ReplyDelete
  2. சரியான இடத்தில் வைத்து சரியான பாடம் கடவுள் ஏற்பாட்டால் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. ARASANGATHTUku seewai seiya auppinal atha than seyyanum.atha vittutu MAHINDAKU MUTTI PUDIKKA PONAL EPPADI NADAKKANUM .

    ReplyDelete
  4. இப்டி பேசி தான் இலங்கையில் அட்ரஸ் இல்லாமல் ஒரு தமிழ் தீவிரவாத கூட்டம் தொலைந்தது. அங்கும் கூடிய விரைவில் அந்த நிலை வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் இந்த முட்டாள் தீவிரவாதிகள்

    ReplyDelete
  5. Mr.mohammadu adey mahindawukku mutti pudika ponandu onakku yaruda sonnadhu? Modha poi news ah olunga ketutu pesu.nattula enna nadakudhune onaku theriya.arivili maari pesadha.onaku theriyuma oru raja thandhiriyin kadamai ennavendru.

    ReplyDelete
  6. Mr.mohammadu adey mahindawukku mutti pudika ponandu onakku yaruda sonnadhu? Modha poi news ah olunga ketutu pesu.nattula enna nadakudhune onaku theriya.arivili maari pesadha.onaku theriyuma oru raja thandhiriyin kadamai ennavendru.

    ReplyDelete
  7. @Mohammadu Anwer,

    அரசாங்கத்தின் சார்பாக அல்லது அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குரிய மரியாதையை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?

    அரசாங்கத்தின் சார்பாக செல்லாமல் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தால் மட்டுமே தவறு எனலாம். மேலும், அவர் தனிப்பட்ட முறையில் சென்றிருந்தால் அரசாங்கம் நடந்த அசம்பாவிதத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்காது மாறாக, அவரது செயலுக்கே கண்டனம் தெரிவித்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.