Header Ads



தேவாலயம் முன்பாக, பிரதேச முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

(எம்.இஸட்.ஷாஜஹான்)

 பரம்பரையாகாழ்ந்து வந்த காணியை பூஜா பூமி திட்டத்தின் கீழ் கைப்பற்ற எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதம்பை தனிவல்ல தேவாலயம் முன்பாக   பிரதேச முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஐந்து  பரம்பரைகளாக வாழந்து வந்த காணியை பூஜா பூமி திட்டத்தின் கீழ் சுவீகரிக்க முயற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9.30 மணிமுதல்  முற்பகல் 11 மணிவரை  கொழும்பு – சிலாபம்  பிரதான வீதியில் மாதம்பை தனிவல்ல தேவாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதுடன் எதிர்ப்;பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான எஸ்.எம். ஹனீபா  என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

ஐந்து  பரம்பரைகளாக  வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணியை தனிவல்ல தேவாலயத்தின் தர்மகர்த்தா கீர்த்தி சேனாநாயக்கா  என்பவர் பூஜா பூமி திட்டத்தின் சுவீகரிக்க திட்டம் மேற்கொண்டு செயற்பட்டு வருகிறார். 1991 ஆம் ஆண்டு முதல் இவர் இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்த காணியில் 23 குடும்பங்களுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள்  பரம்பரையாக வசித்து வருகின்றனர். இந்தக் காணிக்கான உறுதி எங்களிடம் உள்ளது. இதனை  கைப்பற்ற இடமளிக்க nமுடியாது என்றார்.

5 comments:

  1. காணி உறுதியை எடுத்து காட்டிவேண்டியது தானே, பிரச்சனை முடிந்தது.
    அதை விட்டுவிட்டு ஏன் ஆர்ப்பாட்டம் செய்வான்?

    "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதானடா வளர்ச்சி"
    ரேடியோவில் கேட்ட பாடல்.

    ReplyDelete
    Replies
    1. Ithai 10 years munadi neega usithu irundal mullivaihal vanthirugathu

      Delete
  2. Sorry LTTE senja maaziri aduthawanda samaana kalawedukka koodazu

    ReplyDelete
  3. Mister Ajan,, This is too much.

    Respect the feelings of the public who lived there for long period.

    Do not be like BRABAHARAN, who chased the Jaffna Muslims, who lived there generation to generation. Still today It seems difficult for Muslims to get back their land due to racism.

    One day if this happens to you by another racist,, then you will realize it.

    ReplyDelete

Powered by Blogger.