Header Ads



தர்ஹா நகர் பதற்ற நிலை, கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது (படங்கள்)


தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது.

தர்ஹா நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

தர்ஹா நகருக்குச் சென்ற டெங்கு ஒழிப்பு பிரிவினர், டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை விசிறியுள்ளனர்.

அதன்போது, அவர்கள் விசிறிய புகை அங்கிருந்த கடையிலுள்ள பொருட்களின் மீது பட்டதாகக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

பின்னர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் புகை விசிறிய தொழிலாளி ஆகியோரை கடைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட இருவரையும் மீட்டனர்.

அதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.



12 comments:

  1. தர்கா நகர் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும், எடுத்ததெதுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுத்தால் பாதிக்கப்படுவது எமது சகோதரர்கள் தாம்

    ReplyDelete
    Replies
    1. அங்கு வன்முறை எதுவும் நடைபெறவில்லை. Jaffna Muslim இன் தலைப்பினாலேயே நீங்களும் குழம்பியுள்ளீரென நினைக்கிறேன்.

      Delete
    2. சட்டத்தை கையில் எடுப்பது வன்முறைதான், நீங்கள் சொல்லுவதுபோல் எல்லாவற்றுக்கும் சட்டத்தை கையில் எடுத்தால் நாட்டில் சட்டம் எதற்கு, ஒழுங்கு எதற்கு?

      Delete
  2. How stupid they can be ? How can they do to a public servant ?
    எங்கட சோனகனுகளுக்கு்ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்தில்ல.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் சோனகன் தானே brother.
      உங்களது அறிவுக்கு எட்டிய வகையில் குடித்துக்கொண்டு உங்களது kitchen இற்கு duty hours அல்லாத நேரத்தில் அனுமதியின்றி வந்து உங்களது குடும்பத்திற்கு செய்து வைத்த dinner இல் எல்லாம் poison ஐ அடித்துச் சென்றால் எதுவுமே பேச மாட்டீர்களா brother. If not your comment is ok.

      Delete
    2. என்ன மடத்தனமான கேள்வி இது? அப்படி அவர்கள் செய்தால் தக்க ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்திருக்கலாம் மாறாக ஒரு அரச ஊழியரை அடைத்து வைக்கலாமா? கொஞ்சம் காமன் செனஸ் யூஸ் பன்னுங்க புரோ!

      Delete
  3. Unmai solli erukkirkal eru sakotharkalum

    ReplyDelete
  4. Dear brother promax,
    Without clarifying the actual fact don't comment like you did.
    How do you say that they are always trouble makers?

    ReplyDelete
  5. Dear brothers if you don't know what was happened in Dharga town last Saturday. .please stop giving foolish comments. If it's happened to you than you all must know.
    If someone come to your house and destroy your stuffs than only you all will come to know. ..
    You all are peace lovers. ..
    Only dharga town people are trouble makers...
    Don't act like a idiots

    ReplyDelete
    Replies
    1. Whatever happened you are not allowed to take the law into your hand!
      Rather you should have taken evidence and filed a case Against them.
      Now your side of the story won't count under the law since you have imprisened a government servant.
      Don't justify it. What the shop owners did was completely wrong.

      Delete

Powered by Blogger.